???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மார்ச்.19 - பங்குச்சந்தை

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   19 , 2013  13:07:53 IST

இன்றைய வர்த்தகத்தின்போது இந்தியப் பங்குச்சந்தைகளில் பல காரணங்களால் விறுவிறுப்பு காணப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கி தனது மானிட்டரி கொள்கையில் REPO ரேட் விகிதத்தை மேலும் 25 தசமப் புள்ளிகள் குறைத்தது பங்குச்சந்தைக்கு சாதகமான செய்தியாக இருந்தாலும், வேறு சில நிகழ்வுகள் பாதகங்களாக அமைந்து சந்தையின் சரிவுக்கு காரணமாக அமைந்தன. சென்செக்ஸ் 285 புள்ளிகள் குறைந்து 19008ல் முடிவடைந்தது. இது அதிகபட்சமாக 19378ஐயும் குறைந்த பட்சமாக 18939ஐயும் தொட்டது. நிப்டி 89 புள்ளிகள் குறைந்து 5746ல் முடிந்தது.இது அதிக பட்சமாக 5863ஐயும், குறைந்த பட்சமாக 5724ஐயும் தொட்டது.

இன்றைய தினம் தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதி மத்திய அரசில் இருந்து தனது கட்சியின் ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தது இன்றைய சந்தையின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மார்ச் 21ஆம் தேதிக்குள் இந்திய அரசு இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தில் தனது நிலை என்ன என்பதை மத்திய அரசு தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்தமாக ஏர்டெல் நிறுவனர் திரு.சுனில் மிட்டலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது என்று வந்த செய்தியைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனப் பங்குகள் ஒரே நாளில் 4.5 சதவிகிதம் குறைந்தது.

இன்றைய வர்த்தகத்தில் GAIL , சன் பார்மா, பஜாஜ் ஆட்டோ,ITC , மாருதி சுசுகி போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும் BHEL ,ஏர்டெல், ஸ்டெர்லைட், ஜிண்டால் ஸ்டீல், M & M போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின. தி.மு.க.தனது ஆதரவை வாபஸ் வாங்குகிறது என்ற செய்தியை அடுத்து சன் நெட்வொர்க் நிறுவனப் பங்குகள் சரிந்தன.

இன்று மும்பைப் பங்குச்சந்தையில் 1958 நிறுவனப் பங்குகள் விலை சரிந்தும், 904 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும், 108 நிறுவனப் பங்குகள் விலையில் மாற்றங்கள் இல்லாமலும் முடிவடைந்தன. பெரும்பாலான ஆசியப் பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் முடிந்தன. ஐரோப்பிய சந்தைகள் மதிய நிலவரப்படி சரிவுடன் தொடங்கியுள்ளன.


English Summary
Repo cut goes unnoticed; DMK drama of withdrawing support, 2G spectrum summons to telecom bigwigs and the precarious Cyprus issue cause a free-fall in Nifty and Sensex.

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...