???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிப்.19 - பங்குச்சந்தை

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   19 , 2013  06:17:22 IST

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக உயர்வில் முடிவடைந்தன. வர்த்தகத்தின் முற்பகுதியில் குறுகிய எல்லைக்குள் ஊசலாடிக் கொண்டிருந்த சென்செக்ஸ் மற்றும் நிப்டி , பிற்பகுதியில் திடீரென சூடு பிடித்தது. சென்செக்ஸ் 135 புள்ளிகள் உயர்ந்து 19635ல் முடிவடைந்தது. இது இன்று அதிக பட்சமாக 19671ஐயும் குறைந்த பட்சமாக 19457ஐயும் தொட்டது. நிப்டி 41 புள்ளிகள் உயர்ந்து 5939ஐத் தொட்டது. இது அதிகபட்சமாக 5947ஐயும் குறைந்தபட்சமாக 5883ஐயும் தொட்டது. வரும் நாட்களில் நிப்டி 5980 வரை எளிதாக உயரும் வாய்ப்புகள் உள்ளன என்று இந்தியா இன்போலைன் நிறுவனத்தைச் சார்ந்த திரு.அமர் அம்பானி கருத்து தெரிவித்து உள்ளார்.

விப்ரோ,இன்போசிஸ், TCS, ICICI வங்கி, BHEL, டாட்டா ஸ்டீல், ONGC, ஷேஷகோவா போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும், ரிலையன்ஸ்,ஏர்டெல், ஹீரோ மோட்டோகார்ப், Coal India , ஜிண்டால் ஸ்டீல், GAIL மற்றும் HDFC வங்கியின் பங்குகள் விலை குறைந்தும் முடிவடைந்தன.Finolex இண்டஸ்ட்ரீஸ்,மலபார் ட்ரேடிங்,Blue Blend India போன்ற நிறுவனப் பங்குகள் இன்று 52 வாரத்திய அதிகபட்ச விலையைத் தொட்டன. Bihar Sponge, Goodyear India, Himachal Futur, ஹிந்துஸ்தான் ஆயில் மற்றும்  Maharashtra Seam நிறுவனங்களின் பங்குகள் 52 வாரத்திய குறைந்தபட்ச விலையைத் தொட்டன.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 24 சதவிகிதப் பங்குகளை அபுதாபியைச் சார்ந்த எட்டிஹாட் நிறுவனம் வாங்குகிறது என்ற செய்தியைத் தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனப் பங்குகள் 3.2 சதவிகிதம் உயர்ந்தன. நேற்று இந்த பங்குகள் 8 சதவிகிதம் விலை குறைந்தது குறிப்பிடத்தக்கது. ஹோட்டல் லீலா நிறுவனம் தனக்குச் சொந்தமான சென்னை IT பூங்கா கட்டிடத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 1.7 பில்லியன் ரூபாய்களுக்கு விற்கப் போகிறது என்ற செய்தியைத் தொடர்ந்து ஹோட்டல் லீலா நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 8.7 சதவிகிதம் உயர்ந்தன. கிங் பிஷர் நிறுவனத்தின் கடனை அடைப்பதில் அதன் தாய் நிறுவனமான யுனைடெட் ப்ரேவேரிஸ் முனைப்பு காட்டியதைத் தொடர்ந்து கிங் பிஷர் நிறுவனப் பங்குகள் 5 சதவிகிதம் உயர்ந்தன.

மும்பைப் பங்குச்சந்தையில் 1371 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் 742 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும், 847 நிறுவனப் பங்குகள் விலையில் மாற்றமில்லாமலும் முடிவடைந்தன. ஐரோப்பியப் பங்குச் சந்தைகளும் இன்று மதிய நிலவரப்படி சற்று உயர்வுடன் தொடங்கியுள்ளன.


English Summary
The Indian equity markets ended in the green for the second straight trading session on Tuesday

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...