???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பேரறிவாளனை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு 0 ஜல்லிக்கட்டிற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு 0 சங்கர் ஆணவ கொலை வழக்கில் மூவர் விடுதலை எதிர்த்து மேல் முறையீடு:அரசு வழக்கறிஞர் 0 உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கு : கௌசல்யா தந்தை உட்பட ஆறு பேருக்கு தூக்கு! 0 விராட் கோலி - அனுஷ்கா: ஒரு காதல் திருமணத்தின் கதை! 0 புலன் மயக்கம் - 66 - அடுத்த வீட்டுக் கவிஞன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 குமரிக்கு செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 0 குஜராத் தேர்தலில் பாக். தலையீடு: பிரதமர் மோடிக்கு பிரகாஷ்ராஜ் காட்டமான கேள்வி 0 ரஜினியின் 68 வது பிறந்த நாள்; அரசியல் அறிவிப்புக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு! 0 விராட் கோலி - அனுஷ்கா சர்மா இத்தாலியில் திருமணம்! 0 பொன்வண்ணன் ராஜினாமா கடிதத்தை ஏற்கமாட்டோம்: நடிகர் சங்கத்தலைவர் நாசர் 0 காங். தலைவரான ராகுல் காந்தி: டிடிவி தினகரன் வாழ்த்து 0 ஸ்டாலின் முதல்வராகும் நாள் தொலைவில் இல்லை: வைகோ 0 திருமாவளவனின் பேச்சை திட்டமிட்டே அரசியலாக்குகிறார்கள்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 ஒகி புயல் பாதிப்பு: விவசாயிகளுக்கு நிவாரண தொகை அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் : நீதிமன்றம் சொல்வது என்ன?

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   20 , 2017  09:07:15 IST


Andhimazhai Image

 

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர் தனபால். தகுதி நீக்கம் செய்யப்பட்ட அனைவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இன்று வழக்கு விசாரணைக்கு வந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது. வழக்கு விசாரணையின் வாதங்கள் இங்கே:

 

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு  விசாரணையில் அரசு தரப்பில் சோமயாஜி, அரிமா சுந்தரம், வைத்தியநாதன், விஜயநாராயணன் ஆகியோர் வாதாடினார்கள். 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் வக்கீல்கள் துஷ்யந்த் தவே, சல்மான்குர்ஷித், பி.ஆர்.ராமன் ஆகியோர் வாதாடினார்கள். தி.மு.க. தரப்பில் கபில்சிபல் ஆஜரானார்.

 

துஷ்யந்த் தவே வாதம் (18 எம்.எல்.ஏக்கள் தரப்பு ):

 

எடப்பாடி அரசின் மீது நம்பிக்கை இழந்த 18 எம்.எல்.ஏ.க்களும் முதல்-அமைச்சருக்கு கொடுத்து வரும் ஆதரவை திரும்பப் பெற்றனர். இந்த நிலையில் சபாநாயகர் அவர்கள் 18 பேரையும் தகுதி இழப்பு செய்துள்ளார். இது நீதிக்கு எதிரானது. தவறான நடவடிக்கை. கடந்த பிப்ரவரி மாதம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது 18 எம்.எல்.ஏ.க்களும் அரசை ஆதரித்து வாக்களித்தனர். தற்போது அவர்கள் கட்சி தாவி விட்டதாக சொல்வதை ஏற்க இயலாது. அவர்கள் கட்சி தாவவில்லை. எனவே கட்சி தாவல் தடை சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. 18 எம்.எல்.ஏ.க்களும் வேறு எந்த கட்சிக்கும் தாவி செல்லவில்லை. அவர்கள் முதல்-அமைச்சர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று மட்டுமே சொல்லி உள்ளனர். இதை ஏற்காமல் சபாநாயகர் கட்சிக்காரர் போல செயல்பட்டுள்ளார்.

 

சபாநாயகரின் இந்த உத்தரவு கோர்ட்டின் பரிசீலனைக்கு உட்பட்டதே. சபாநாயகர் என்பவர் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை, டெல்லியில் உள்ள சிலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. டெல்லியில் உள்ள சிலர் இந்த அரசை இயக்குகிறார்கள். கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

 

மேலும்“18 எம்.எல்.ஏ.க்களும் உரிய விளக்கம் அளிக்க சபாநாயகரிடம் முறையான ஆவணங்கள் கேட்கப்பட்டது. அந்த ஆவணங்களை சபாநாயகர் தரவில்லை. அந்த ஆவணங்களைத் தந்தால் விசாரணைக்கு ஆஜராக 18 எம்.எல்.ஏ.க்களும் தயாராக உள்ளனர். இந்த நிலையில் அவர்களை தகுதி இழப்பு செய்தது சட்டப்படி செல்லாது”. மேலும் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்புக்கான உத்தரவு நேரில் வழங்கப்படவில்லை. இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ததை பார்த்தே தெரிந்து கொண்டனர். தகுதி நீக்க நோட்டீஸ் வழங்காததும் தவறாகும். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும் என்ற திட்டத்துடன்தான் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி இழப்பு செய்து சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார். எனவே 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பை செல்லாது என்று அறிவித்து ரத்து செய்ய வேண்டும்.

 

இவ்வாறு மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே வாதாடினார்.

 

அரிமா சுந்தரம் வாதம் (  சபாநாயகர் தரப்பு) :

 

இந்த வழக்கிற்கு தேவையில்லாத வாதங்கள்  முன் வைக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் மத்திய அரசை குறை கூறக்கூடாது.  சபாநாயகர் குறித்து கண்மூடித்தனமாக குற்றச்சாட்டுகளை வைப்பது கண்டனத்திற்குரியது. 18 எம்.எல்.ஏ.க்களும் சட்டத்துக்கு உட்பட்டுதான் தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளனர். அரசு, சபாநாயகர் மீது குற்றசாட்டுகளை வைப்பதால் விளக்கம் அளிக்க கூடுதல் அவகாசம் தேவை. பதில் அளிக்க 10 நாட்கள் கால அவகாசம் தேவை. அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. பெரும்பான்மையை நிரூபிக்க போடப்பட்டுள்ள தடையை தேவைப்பட்டால் நீட்டிக்கலாம் என அரிமா சுந்தரம்  வாதிட்டார்.

 

கபில் சிபில் வாதம்: 

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்ட தடையை நீடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபில் வாதிட்டுள்ளார். வழக்கில் தீர்ப்பு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் அவர் கூறினார்.

 

தீர்ப்பு விவரம்: 

 

இதையடுத்து இந்த வழக்கின் நீதிபதி துரைசாமி  கூறுகையில்:  இந்த வழக்கில் அடுத்த உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது.  வழக்கு முடியும் வரை 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்கவும்  நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. 18 எம்எல்ஏக்கள்  தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் பேரவைச்செயலாளர், முதலமைச்சர்,அரசு கொறடா பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது என்று உத்தரவிட்டார். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...