???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மார்ச்.18 - பங்குச்சந்தை

Posted : திங்கட்கிழமை,   மார்ச்   18 , 2013  07:06:31 IST

இன்று ஆசியப் பங்குச்சந்தைகள் அனைத்திலும் காணப்பட்ட சரிவின் தாக்கம் இந்தியப் பங்குச்சந்தைகளிலும் பிரதிபலித்தது. சென்செக்ஸ் 134 புள்ளிகள் குறைந்து 19293லும் நிப்டி 38 புள்ளிகள் குறைந்து 5834லும் முடிவடைந்தன. வங்கிகள் மற்றும் வாகன உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் இன்றைய சரிவில் முக்கியப் பங்கு வகித்தன. 19ஆம் தேதி வெளிவர இருக்கும் மானிட்டரி பாலிசி அறிக்கை பங்கு வர்த்தகர்களால் ஆர்வத்துடன் எதிர்நோக்கப் படுகிறது.

இன்றைய வர்த்தகத்தில் சிப்லா, ஹிந்துஸ்தான் யூனிலிவர், HDFC வங்கி, ITC மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும், Coal India , டாட்டா பவர், GAIL, மாருதி சுசுகி, ஸ்டெர்லைட் நிருவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின. பொருளாதாரப் பற்றாக்குறைக்கு நிவர்த்தி காணும் விதமாக இந்திய அரசாங்கம் பொது நிறுவனங்களில் உள்ள தனது பங்குகளை விற்கப்போகிறது என்ற செய்தியைத் தொடர்ந்து Coal India நிறுவனப் பங்குகளின் விலை 5.7 சதவிகிதம் சரிந்தது.
ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள தனது 5 நட்சத்திர ஓட்டலை GMR Infra நிறுவனம் விற்கப்போகிறது என்ற செய்தியைத் தொடர்ந்து அந்நிறுவனப் பங்குகள் விலை 5 சதவிகிதம் உயர்ந்தது..

இன்றைய வர்த்தகத்தில் 1144 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும், 1779 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின. இன்று Birla Cotsyn (India), Bampsl Securities, Bafna Spinning Mills & Exports போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகமான எண்ணிக்கையில் வர்த்தகமாயின.
 


English Summary
Indian markets closed lower on Monday tracking selloff in Asian markets

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...