???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிப்.18 - பங்குச்சந்தை

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   18 , 2013  06:17:57 IST

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று பங்குச்சந்தைக் குறியீடுகள் சற்றே உயர்வுடன் முடிவடைந்தன. சின்னச் சின்ன ஏற்றத் தாழ்வுகளுடன் நாள் முழுவதும் காணப்பட்ட சென்செக்ஸ் மற்றும் நிப்டி முறையே 33, 11 புள்ளிகள் அதிகரித்து 19501லும் 5898லும் முடிவடைந்தன. சந்தையின் போக்கு சரிவை நோக்கியே உள்ளது எனவும் 5850 மற்றும் 5820 என்ற நிலைகளைத் தாண்டி நிப்டி குறையும் பட்சத்தில் மேலும் சரிவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பது நிபுணர்களின் கருத்தாகும்.

இன்றைய வர்த்தகத்தில் டாட்டா ஸ்டீல், ஹிந்துஸ்தான் யூனிலிவர்,ஸ்டெர்லைட், L &T மற்றும் HDFC போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும், ஜிண்டால் ஸ்டீல், Coal India, ONGC ,பஜாஜ் ஆட்டோ, TCS நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் முடிவடைந்தன. MMTC நிறுவனப் பங்குகள் இன்று ஒரே நாளில் 8.7 சதவிகிதம் உயர்ந்தது. கடந்த 7 நாட்களில் கிட்டத்தட்ட 9 சதவிகிதம் வரை குறைந்திருந்த DLF நிறுவனப் பங்குகள் இன்று ஒரே நாளில் 5 சதவிகிதம் உயர்ந்தது.

இன்றைய வர்த்தகத்தில் மும்பைப் பங்குச்சந்தையில் 1642 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் 1259 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் முடிவடைந்தன.


English Summary
Indian equities ended the volatile session on a lackluster note on Monday.

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...