???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜன.18 - பங்குச் சந்தை

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   18 , 2013  05:41:59 IST

வாரத்தின் இறுதி நாளான இன்று இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கின. துவக்கத்தின்போது சென்செக்ஸ் 123 புள்ளிகள் அதிகரித்து 20087லும் நிப்டி 37 புள்ளிகள் அதிகரித்து 6076லும் காணப்பட்டன. வர்த்தகத்தின் பிற்பகுதியில் கொஞ்சம் சரிந்து சென்செக்ஸ் 20039லும் நிபிட்டி 6064லும் முடிவடைந்தன. சுமார் இரண்டு வருடங்களுக்குப் பின் சென்செக்ஸ் 20000த்தையும் நிப்டி 6000த்தையும் தாண்டி நிலை பெறுவது சற்று ஆறுதலான விஷயம்.

நேற்று பங்குச் சந்தை உயர்வுக்குக் காரணமாக அமைந்த எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் பங்குகள் இன்றும் விலை உயர்ந்து வர்த்தகமாயின. ONGC நிறுவனப் பங்குகள் இன்று ஒரே நாளில் 7.5 சதவிகிதம் உயர்ந்தது. NTPC , மாருதி சுஷுகி , Gail மற்றும் HDFC நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் விப்ரோ, ஹீரோ மோட்டோ கார்ப், Dr .Reddy Labs , ஹிந்துஸ்தான் யூனிலிவர், ஜிண்டால் ஸ்டீல்ஸ் நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருவதால் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனப் பங்குகளின் விலைகள் சரிந்து காணப்பட்டன. விப்ரோ நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு நிதி அறிக்கை சாதகமாக இருந்த போதிலும் பங்குகளின் விலை ஒரே நாளில் 7.8 சதவிகிதம் குறைந்தது. சமீபத்திய டீசல் உயர்வு குறித்த அறிக்கையும், ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப்பட்டதும் இந்த உயர்வுக்கு காரணமாக அமைந்தாலும், பல நிறுவனங்களின் பங்குகள் மதிப்பீட்டை தாண்டி வர்த்தகமாவது Profit Bookingஐத் தூண்டக்கூடும் என்றும் சற்று சரிவு ஏற்படலாம் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர்.


மும்பைப் பங்குச் சந்தையில் 1305 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் 1713 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின. ஹிந்துஸ்தான் பெற்றொலெஉம் நிறுவனப் பங்குகள் 101 கோடி ரூபாய்களுக்கு வர்த்தகமாகி முதல் இடத்தைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து SBI  பங்குகள் 84.6 கோடி ரூபாய்களுக்கும் ONGC பங்குகள் 75.2 கோடி ரூபாய்களுக்கும் வர்த்தகமாயின. அசோக் லைலான்ட், Suzlon மற்றும் Unitec நிறுவனப் பங்குகள் அதிகமான எண்ணிக்கையில் வர்த்தகமாயின.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...