???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜன.17 - பங்குச் சந்தை

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   17 , 2013  06:31:30 IST

வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று காலையில் பங்குச் சந்தை சற்று சரிவுடன் தொடங்கினாலும் பிற்பகுதியில் சூடு பிடித்தது. சென்செக்ஸ் 146 புள்ளிகள் உயர்ந்து 19964லும் நிப்டி 37 புள்ளிகள் அதிகரித்து 6039லும் முடிவடைந்தன. கச்சா எண்ணையின் விலை ஏற்ற இறக்கத்தை அனுசரித்து எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் டீசல் விலையை சற்று ஏற்றவோ இறக்கவோ செய்து கொள்ளலாம் என்று அமைச்சர் வீரப்ப மொய்லியின் அறிவிப்பைத தொடர்ந்து எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனப் பங்குகளின் விலை சரசரவென உயர்ந்தன.

இன்று ONGC ,ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்,ஏர்டெல்,டாட்டா மோட்டார்ஸ் மற்றும் விப்ரோ நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், சிப்லா, ICICI , ஹிண்டால்கோ,பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனப் பங்குகளின் விலைகள் குறைந்தும் விற்பனையாயின. இந்தியன் ஆயில் கார்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற நிறுவனப் பங்குகளின் விலை ஒரே நாளில் 6 சதவிகிதத்திற்கும் அதிகமாக முடிவடைந்தன.

மும்பைப் பங்குச் சந்தையில் 1415 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் 1535 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனப் பங்குகளின் மொத்த வர்த்தகத் தொகை  120 கோடி ரூபாயைத் தாண்டி முதல் இடத்தை பிடித்தது. United  Spirits பங்குகள் 74.5 கோடி ரூபாய்களுக்கும், SBI பங்குகள் 71.56 கோடி ரூபாய்களுக்கும் வர்த்தகமாயின. IFCI , HPCL மற்றும் Jaiprakash  assosiats நிறுவனப் பங்குகள் அதிகமான எண்ணிக்கையிலும் விற்பனையாயின.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...