???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜன.16 - பங்குச் சந்தை

Posted : புதன்கிழமை,   ஜனவரி   16 , 2013  06:39:16 IST

இந்தியப் பங்குச் சந்தைக் குறியீடுகள் வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் முடிந்துள்ளன. சென்செக்ஸ் 169 புள்ளிகள் சரிந்து 19817லும் நிப்டி 55 புள்ளிகள் சரிந்து 6001லும் முடிவடைந்தன. 5950க்கும் 6050க்கும் இடையே நிப்ட்டி இன்னும் சற்று நாட்கள் ஊசலாடும் என்று தெரிகிறது. 6050 நிப்ட்டியின் உயர்வுக்கு பெரிய தடையாக இருக்கும் என்றும் profit booking காரணமாக இந்த நிலையிலிருந்து சற்று வீழ்ச்சி காணப்படலாம் என்றும் வல்லுனர்கள் கருது தெரிவிக்கின்றனர்.

இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், Dr .Reddy Labs , டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், NTPC மற்றும் Gail நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் ஹிண்டால்கோ, மாருதி சுஷூக்கி,டாட்டா மோட்டார்ஸ், ஜிண்டால் ஸ்டீல், மற்றும் M &M நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின. TTK Prestige நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு அறிக்கை எதிர்பார்ப்பை மிஞ்சி நன்றாக அமைந்ததால் இன்று ஒரே நாளில் பங்குகளின் விலை சுமார் 6.5 சதவிகிதம் உயர்ந்தன. சில நாட்களாக உயர்வுடன் வர்த்தகமான Yes Bank மற்றும் ICICI போன்ற நிறுவனங்களின் பங்குகள் Profit Booking காரணமாக இன்று குறைந்தன.

மும்பைப் பங்குச் சந்தையில் 994 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் 2027 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் முடிவடைந்தன. இன்றைய மொத்த வர்த்தகத்தில் United Sprits நிறுவனப் பங்குகள் 119.5 கோடி ரூபாய்க்கு வர்த்தகமாகி முதல் இடத்தை பிடித்தது. SBI 66.5 கோடி ரூபாய்க்கும் ரிலையன்ஸ் 61.3 கோடி ரூபாய்க்கும் வர்த்தகமாயின. யூனிடெக், Birla Cotsyn , கிங் பிஷர் நிறுவனப் பங்குகள் அதிக எண்ணிக்கையிலும் வர்த்தகமாயின.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...