???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிப்.15 - பங்குச்சந்தை

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   15 , 2013  06:50:50 IST

வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று இந்தியப் பங்குச்சந்தைகள் சற்று சரிவுடன் முடிவடைந்தன. சென்செக்ஸ் 29 புள்ளிகள் குறைந்து 19468லும், நிப்டி 9 புள்ளிகள் குறைந்து 5887லும் முடிவடைந்தன. இது 2013ஆம் ஆண்டில் என்றும் இல்லாத அளவிற்குக் குறைந்த மதிப்பாகும். இன்று எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை நிறுவனங்கள், மென்பொருள் மற்றும் ஆரோக்கியப் பராமரிப்புத் துறை நிறுவனங்களின் பங்குகள்  விலை குறைந்து முடிவடைந்தன.அதே சமயத்தில் வாகன உற்பத்தி, வங்கி மற்றும் நுகர்பொருள் துறையைச் சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் உயர்வில் முடிவடைந்தன.

வரும் நாட்களில் 5820 என்பது சரியும் நிப்டிக்கு மிகப் பெரிய ஆதரவாக இருக்கும் என்றும் அங்கிருந்து உயர்வு துவங்கும் என்றும் பங்குச் சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர். இருப்பினும் பிப்ரவரி இறுதியில் வெளிவர இருக்கும் பட்ஜெட்தான் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் என்று தெரிகிறது. அதுவரை இது போன்ற ஏற்ற தாழ்வுகளுடனே பங்கு வர்த்தகம் இருக்கும் என்றும் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

இன்றைய வர்த்தகத்தில் டாட்டா மோட்டார்ஸ்,டாட்டா பவர்ஸ்,ஏர்டெல், ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், GAIL நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும், Dr.Reddy Labs, பஜாஜ் ஆட்டோ, டாட்டா ஸ்டீல், ரிலையன்ஸ் மற்றும் இன்போசிஸ் நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் முடிவடைந்தன. மும்பைப் பங்குச் சந்தையில் இன்று 1194 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும், 1723 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் முடிவடைந்தன.


English Summary
Sensex, Nifty end at 2013 lows;

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...