???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜன.15 - பங்குச் சந்தை

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   15 , 2013  10:33:18 IST

இன்று இந்தியப் பங்குச் சந்தைகளில்  நேற்றைய வர்த்தகத்தைப் போலவே விறுவிறுப்பாக நடந்த வர்த்தகத்தின்  முடிவில் சென்செக்ஸ் 80 புள்ளிகள் உயர்வடைந்து 19986லும், நிப்டி 32 புள்ளிகள் உயர்ந்து 6056லும் முடிவடைந்தன. மோதிலால் ஆஸ்வால் நிறுவனத்தின் CMD திரு.மோத்திலால் "நீண்ட காலத்திற்குப் பின் சென்செக்ஸ் இன்று 20000 என்ற பெரிய தடையைத் தாண்டியது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

GAAR சட்டச் சீரமைப்பை 2 வருடங்களுக்கு தள்ளி வைப்பதாக திரு.ப. சிதம்பரம் அறிவித்ததும் அறிக்கை வெளியிட்டதும், ஜனவரி 29 ஆம் தேதி வட்டி விகிதம் 25 தசமப் புள்ளிகள் குறையும் என்ற நம்பிக்கையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தின. இதன் விளைவாக வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து இந்தியப் பங்குச் சந்தைகளில் பணம் குவிந்த வண்ணமே உள்ளது.

எனினும் கடந்த காலங்களில் நிபிட்டி மற்றும் சென்செகசின் போக்கைப் பார்க்கையில் 6050 ஒரு மிகப் பெரிய தடையாக இருநதிருக்கிறது .அதனால் இந்த நிலையில் Profit Booking காரணமாக விலை சரியவும் வாய்ப்புள்ளதாகவும் சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய வர்த்தகத்தில் ஏர்டெல், ITC , ICICI வங்கி, டாட்டா பவர் மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் , Coal India , ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ்,ஜிண்டால் ஸ்டீல், மற்றும் சன் பார்மா நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின. இன்றைய மும்பைப் பங்குச் சந்தையில் 1422 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும், 1544 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...