???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர்: ஆர்.பி.உதயகுமார் 0 ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்தல்ல: ஜெயக்குமார் 0 தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும்: தலைமை செயலாளர் 0 ஜெ. இல்லத்தை நினைவு இல்லமாக்குவது கொள்கை முடிவு: தமிழக அரசு 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜன.14 - பங்குச் சந்தை

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   14 , 2013  08:09:34 IST

இன்றைய வர்த்தகத்தில் பங்குச்சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி காலையில் சற்றே சரிவுடன் தொடங்கினாலும் பிற்பகலில் சூடு பிடித்து உயர்வுடன் முடிவடைந்தன. சென்செக்ஸ் 242 புள்ளிகள் அதிகரித்து 19906லும் நிப்டி 72 புள்ளிகள் உயர்ந்து 6024லும் முடிவடைந்தன. சென்செக்ஸ் கடந்த இரு ஆண்டுகளில் இந்த அளவுக்கு உயர்வுடன் முடிந்தது கிடையாது.

பணவீக்கம் சந்தையின் எதிர்பார்ப்பை விட குறைந்தது, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் GAAR சட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தது, மற்றும் ஜனவரி 29 ஆம் தேதி வட்டிவிகிதம் 25 தசமப் புள்ளிகள் குறையும் என்ற நம்பிக்கை ஆகியவை இன்றைய உயர்வுக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன. பல நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கை முதலீட்டாளர்களின் மதிப்பீட்டை விடவும் அதிகமாக இருந்ததும் இன்றைய உயர்வுக்கு ஒரு காரணமாகும்.

ONGC , இன்போசிஸ், ஜிண்டால் ஸ்டீல், TCS மற்றும் HDFC நிறுவனப் பங்குகள் உயர்வுடனும் மாருதி சுஷூக்கி, சிப்லா, பஜாஜ் ஆட்டோ, டாட்டா மோட்டார்ஸ் மற்றும் M &M  நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் முடிவடைந்தன. ரியாலிட்டி மற்றும் மென்பொருள் நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டன.

மும்பைப் பங்குச் சந்தையில் 1756 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் 1200 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின. இன்றைய மொத்த வர்த்தகதொகையில் TCS 58 .2 கோடி ரூபாய்க்கு வர்த்தகமாகி முதலிடம் பிடித்தது. டாட்டா மோட்டார்ஸ் பங்குகள் 50.5 கோடி ரூபாய்க்கும் ICICI வங்கியின் பங்குகள் 49.2 கோடி ரூபாய்க்கும் வர்த்தகமாயின. ஆதார் வென்ச்சர்ஸ், சுஸ்லான், ஸ்ரீ கணேஷ் ஸ்பின்னர்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகமான எண்ணிக்கையிலும் வர்த்தகமாயின.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...