அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 மத்திய அரசு கொடூரமாக நடந்துகொள்கிறது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் செப்.15-க்குள் உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 நிதிநிலை பற்றாக்குறை விவகாரம்: புதிய சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் 0 நீட் தேர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு; இதை மாற்ற முடியாது: எச்.ராஜா 0 மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் தங்கம் தென்னரசு 0 91 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது! 0 ஜூன் 24ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்! 0 யோகா நேபாளத்தில்தான் உருவானது: சர்மா ஒலி பேச்சு 0 திமுக அரசுக்கு கால அவகாசம் கொடுங்கள், நிச்சயம் நல்லாட்சி தருவார்கள்: கே.எஸ்.அழகிரி 0 கொரோனா தொற்றுக்கு நடிகை ரேஷ்மா மரணம் 0 தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு - எடப்பாடி பழனிசாமி 0 முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் நோபல் பரிசு பெற்று பொருளாதார நிபுணர்! 0 தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் - ஆளுநர் 0 தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் சட்டமன்ற கூட்டம் இன்று!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பிப்.14 - பங்குச்சந்தை

Posted : வியாழக்கிழமை,   பிப்ரவரி   14 , 2013  16:52:06 IST

இன்று காலையில் சற்றே உயர்வுடன் துவங்கிய இந்தியப் பங்குச்சந்தைகள், சற்று நேரத்தில் சரியத் துவங்கின. தொடர்ந்து எட்டு நாட்களாக சரிவில் முடிவடைந்த சென்செக்ஸ் மற்றும் நிப்டி கடந்த இரு தினங்களாக உயர்வில் முடிந்தது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்தது. இந்நிலையில் இன்று சென்செக்ஸ் 111 புள்ளிகள் குறைந்து 19498லும் நிப்டி 36 புள்ளிகள் குறைந்து 5896லும் முடிவடைந்தன.

இன்றைய சரிவுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை நிறுவனங்களும், வாகன உற்பத்தி நிறுவனங்களும் முக்கியக் காரணங்களாக அமைந்தன. வரும் வர்த்தக நாட்களில் நிப்டி 5900க்கு மேலான நிலையைத் தக்கவைத்துக் கொள்ளாமல் 5880க்கு கீழே குறையுமானால் முதலீட்டாளர்கள் பங்குகளைத் தொடர்ந்து விற்பனை செய்ய முயலலாம் என்றும் அதனால் பங்குச்சந்தை மேலும் சரியாய் வாய்ப்புகள் உள்ளன என்றும் தெரிகிறது.

எனினும் பங்குச்சந்தையின் நிச்சயமான போக்கினை பிப்ரவரி 28ஆம் தேதி வர இருக்கும் பட்ஜெட் மற்றும் உலக பொருளாதார நிலைமைகள்தான் முடிவு செய்யும். இன்றைய வர்த்தகத்தில் ஹிந்துஸ்தான் யூனிலிவர், GAIL ,டாட்டா ஸ்டீல், HDFC வங்கி மற்றும் TCS நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும், ஏர்டெல், விப்ரோ, மாருதி சுசுகி, L &T மற்றும் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் முடிவடைந்தன.

மும்பைப் பங்குச்சந்தையில் 879 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் 2041 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் முடிவடைந்தன. பணவீக்க விகிதம் எதிர்பார்ப்பைக் காட்டிலும் குறைந்தும் கூட பங்குச்சந்தைகள் சரிவில் முடிவடைந்தது கவனிக்கத்தக்கது.

 


English Summary
Indian markets declined further today despite lower than expected inflation numbers

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...