???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மார்ச்.13 - பங்குச்சந்தை

Posted : புதன்கிழமை,   மார்ச்   13 , 2013  08:49:02 IST

இன்று இந்தியப் பங்குச்சந்தைகள் இரண்டாவது நாளாக சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் 202 புள்ளிகள் குறைந்து 19362ல் முடிவடைந்தது. இது அதிகபட்சமாக 19511ஐயும் குறைந்தபட்சமாக 19338ஐயும் தொட்டது. நிப்டி 63 புள்ளிகள் குறைந்து 5851ல் முடிவடைந்தது. இது அதிகபட்சமாக 5893ஐயும் குறைந்த பட்சமாக 5842ஐயும் தொட்டது. இன்றைய சரிவில் வங்கிகளின் பங்குகள் முக்கிய காரணமாக அமைந்தன. நுகர்பொருள் உற்பத்தி நிறுவனங்களைத் தவிர மற்ற அனைத்து துறைகளிலும் சரிவு காணப்பட்டது.

இன்றைய வர்த்தகத்தில் சன் பார்மா, ITC , ஏர்டெல், ஹிந்துஸ்தான் யூனிலிவர், மற்றும் Coal India நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும், ஹிண்டால்கோ, ICICI வங்கி, பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசுகி, ஜிண்டால் ஸ்டீல் நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின. நாளை வெளிவர இருக்கும் மாதாந்திர பணவீக்க புள்ளிவிவர அறிக்கை சந்தையின் போக்கில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். பங்குச் சந்தைகள் கரடிகளின் பிடியில் இருப்பது தெளிவாகிவிட்ட நிலையில் முதலீட்டாளர்கள் கவனமுடன் செயல்படுவது அவசியம் என்பது நிபுணர்களின் கருத்து.

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான Jaguar Land Rover நிறுவனத்தின் மொத்த விற்பனை வெறும் 3 சதவிகித வளர்ச்சி மட்டும் காட்டிய நிலையில் அந்நிறுவனப் பங்குகளின் விலை 1.2 சதவிகிதம் சரிந்தன. இன்றைய வர்த்தகத்தில் 1003 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும், 1882 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும், 128 நிறுவனங்களின் பங்குகள் விலையில் மாற்றங்கள் இல்லாமலும் முடிவடைந்தன. தைவானைத் தவிர இதர ஆசியப் பங்குச் சந்தைகள் அனைத்தும் சரிவிலேயே முடிவடைந்தன. ஐரோப்பியப் பங்குச்சந்தைகளும் மதிய நிலவரப்படி சரிவிலேயே தொடங்கியுள்ளன


English Summary
Indian equities settled sharply lower on Wednesday ahead of inflation data tomorrow

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...