???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்தல்ல: ஜெயக்குமார் 0 தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும்: தலைமை செயலாளர் 0 ஜெ. இல்லத்தை நினைவு இல்லமாக்குவது கொள்கை முடிவு: தமிழக அரசு 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிப்.13 - பங்குச்சந்தை

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   13 , 2013  05:41:22 IST

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக உயர்வில் முடிவடைந்துள்ளன.எட்டு நாட்களாக சரிவிலேயே முடிவடைந்து வந்த பங்குச்சந்தைக் குறியீடுகள் கடந்த இரண்டு நாட்காளாக உயர்வில் முடிவடைவது கவனிக்கத்தக்கது. சென்செக்ஸ் 47 புள்ளிகள் உயர்ந்து 19068லும், நிப்டி  10 புள்ளிகள் உயர்ந்து 5932லும் முடிவடைந்தன. இந்த மாத இறுதியில் பட்ஜெட் வெளிவர இருப்பதால் அதுவரை சந்தைகள் ஏற்றத்தாழ்வுகளுடன் போக்கைக் கணிக்க முடியாத நிலையிலேயே இருக்கும் என்று தெரிகிறது.

இந்த வருட பட்ஜெட் பொதுவாக பங்குச்சந்தை வர்த்தகத்திற்கு சாதகமாகவே இருக்கும் என்று எம்கே குளோபல் பைனான்சியல் சர்விசஸ் நிறுவனத்தின் இயக்குனர் திரு.கிருஷ்ணகுமார் கர்வா நம்பிக்கை தெரிவித்தார்.இன்றைய வர்த்தகத்தில் டாட்டா மோட்டார்ஸ், HDFC , M & M ,TCS ,இன்போசிஸ் நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும், ஸ்டெர்லைட், பஜாஜ் ஆட்டோ, டாட்டா பவர்ஸ், டாட்டா ஸ்டீல், GAIL நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் முடிவடைந்தன.

கிங் பிஷர் நிறுவனம் வாங்கிய கடனுக்காக அடகு வைக்கப்பட்ட சொத்துகள் ஏலத்திற்கு வரலாம் என்று செய்தி வெளியானதை அடுத்து UB குழுமத்தைச் சார்ந்த நிறுவனப் பங்குகள் அனைத்தும் இன்று சரிவைச் சந்தித்தன. United Breweries பங்குகள் 9.2 சதவிகிதமும், United Breweries Holdings 9.97 சதவிகிதமும், United Sprits நிறுவனப் பங்குகள் 5 சதவிகிதமும் விலை குறைந்தன. 2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் யூனிடெக் நிறுவனத்திற்கும் DB ரியாலிட்டி நிறுவனத்திற்கும் இருக்கும் தொடர்பு குறித்து DB  ரியாலிட்டி நிறுவன இயக்குனர் CBI -யால் விசாரிக்கப்படலாம் என்று செய்தி வெளியானதைத் தொடர்ந்து DB  ரியாலிட்டி நிறுவனப் பங்குகள் ஒரே நாளில் சுமார் 18 சதவிகிதம் சரிந்தன.

மும்பைப் பங்குச் சந்தையில் இன்று 1237 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் 1656 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் முடிவடைந்தன. மொத்த வர்த்தகத்தொகை அடிப்படையில் United Sprits , SBI , யூனிடெக், மற்றும் கர்நாடகா வங்கியின் பங்குகள் முதல் நான்கு இடங்களைப் பிடித்தன. மொத்த எண்ணிக்கை அடிப்படையில் யூனிடெக், DB ரியாலிட்டி, கிங் பிஷர் மற்றும் Suzlon நிறுவனப் பங்குகள் முதல் நான்கு இடங்களைப் பிடித்தன.

 


English Summary
The Indian markets closed in the green today, its second consecutive gain after ending in the red for eight straight sessions.

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...