???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 0 13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை கைது! 0 சலூன்கள், பியூட்டி பார்லர் செல்ல ஆதார் அட்டை கட்டாயம்: தமிழக அரசு 0 பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கkகோரி ஆசிரியர்கள் சங்கம் வழக்கு 0 சென்னையில் பைக்கில் 2 பேர் சென்றால் ரூ.500 அபராதம் 0 பொருளாதாரத்தை மோசமாக கையாளுகிறார் மோடி: ராகுல் காந்தி 0 இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும்: பிரதமர் மோடி உறுதி 0 தமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று 0 வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன்: டிரம்ப் எச்சரிக்கை 0 ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி வேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமராக மீண்டும் ருத்ரா

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   11 , 2013  22:16:04 IST


Andhimazhai Image
நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமராக மீண்டும் உருத்திரகுமாரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
 
இது பற்றி நாடுகடந்த தமிழீழ அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 
 
மூன்றாண்டு முதற்தவணைக்கால அரசவையினை நிறைவு செய்து இரண்டாம் தவணை காலத்திற்கான முதலாம் அரசவையினை அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் நா.தமிழீழ அரசாங்கம் கூட்டியிருந்தது.

டிசெம்பர் 6-7-8ம் நாட்களில் கூடியிருந்த இந்த அமர்வில் ஒரு தொகுதி உறுப்பினர்கள் சுவிஸ் நாட்டின் சூரிச் நகரில் இருந்து தொலைத் தொடர்பு தொழிநுட்ப வாயிலாக கலந்து கொண்டிருந்தனர்.

அரசவை அமர்வு, செயலமர்வு என இடம்பெற்றிருந்த இந்நாட்களில் விவாதங்கள் ,கருத்துப்பட்டறைகள், தீர்மானங்கள், சிறப்புரைகள் என பல்வேறு விடயங்கள் நிகழ்விற்கு வலுவூட்டி இடம்பெற்றிருந்தன.

தொடக்க நிகழ்வு:

தொடக்க நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் தமிழீழ விடுதலைக்கான தங்களது தோழமை உரையினை வழங்கியிருந்தனர்.

தோழர் தியாகு, பேராசிரியர் மணிவண்ணன் ஆகியோர் ஈழவிடுதலைக்கான தமிழக மக்களது தோழமைச்செய்தியினை காவிவந்திருந்தனர்.

உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவல் அவர்களும் சிறப்புரையினை வழங்கியிருந்தார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைக்குழுப் பிரதிநிதிகள் மற்றும் மேற்சபை உறுப்பினர்களது உரைகளும் இடம்பெற்றிருந்தன.

Mr. Robert Evans (Former Member of European Parliament – Senator TGTE),Mr. Johari Abdul (Member of Malaysian Parliament, Sungai Patani, Malaysia, Chair of "Malaysian Parliament Caucus Displaced Tamils in Sri Lanka"),Mr. Troels Ravn (Member of the Denmark Parliament -The Social Democratic Party) , Mr. Vijeyan Moorgan ( from Mauritius), Mr. Jeffrey Robertson QC ஆகிய அனைத்துலப் பிரமுகர்களது கருத்துரைகள் ஈழவிடுதலைக்கான ஆதரவுத்தளத்திற்கு உற்சாகத்தினை தந்திருந்தது.

அரசவை அமர்வு :

கலாநிதி தவேந்திரா அம்பலவாணர் அவர்களை அவைத் தலைவராகவும், தில்லை நடராஜா அவர்களை பிரதி அவைத்தலைவராகவும், இரகசிய வாக்கெடுப்பின் மூலம் மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்திருந்தனர்.

விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதமராக மக்கள் பிரதிநிதிகள் ஏகமனதாக தேர்வு செய்திருந்தனர்.

மக்கள் பிரதிநிதிகள் ஆர்வத்துடன் தங்களது அறிமுக கருத்துரைகளை வழங்கியிருந்ததோடு, அரசவை விவாதங்களிலும் பங்கெடுத்து அரசவை பண்புக்கும் மரபுக்கும் வலுவூட்டியிருந்தனர்.

பொதுநலவாயத்தில் இருந்து சிறிலங்காவினை இடைநிறுத்தக் கோரும் தீர்மானம் மற்றும் தென் ஆப்ரிக்காவினால முன்வைக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை நிராகரிக்கும் தீர்மானம் உட்பட தீர்மானங்கள் பலவும், அரசவை நிறைவு நாள் அமர்வில் நிறைவேற்றப்பட்டிருந்தன.

செயலமர்வு :

பேராசிரியர் சிறிஸ்கந்தராஜா ,பேராசிரியன் மணிவண்ணன் ஆகியோர் செயலமர்வு பட்டறையினை நடத்தியிருந்தனர்.

நாடுகடந்த தமிழர் அரசியல் , மனித உரிமைகளும் இனப்படுகொலைக்கான நீதிகோரலும், மாறிவரும் இந்து சமுத்திர பூகோள அரசியலும் எமது வெளியுறவுக் கொள்கையும் உட்பட பல்வேறு தொனிபொருட்களில் இச்செயலமர்வுப்பட்றைகள் இடம்பெற்றிருந்தன.

இந்த மூன்று நாள் அமர்விலும் தமிழ் சமூக அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் ,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கெடுத்து தங்களின் ஆதரவை வலுவூட்டியிருந்தனர்.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...