???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மார்ச்.11 - பங்குச்சந்தை

Posted : திங்கட்கிழமை,   மார்ச்   11 , 2013  08:25:02 IST

கடந்த வாரத்தில் மூச்சிரைக்க மேலே மேலே ஏறி சுமார் 4 சதவிகிதம் வரை உயர்ந்த இந்தியப் பங்குச்சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி. இந்த வாரத்தின் முதல் நாளான இன்று கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டதால் பெரிய மாற்றங்கள் இல்லாமல் முடிவடைந்தன. சென்செக்ஸ் 37 புள்ளிகள் குறைந்து 19646ல் முடிவடைந்தது. இது அதிகபட்சமாக 19754ஐயும், குறைந்த பட்சமாக 19602ஐயும் தொட்டது. நிப்டி 3 புள்ளிகள் குறைந்து 5942ல் முடிவடைந்தது. இது அதிக பட்சமாக 5971ஐயும், குறைந்த பட்சமாக 5930ஐத் தொட்டது.

இன்றைய வர்த்தகத்தில், டாட்டா பவர்ஸ், HDFC , சன் பார்மா, M & M , Gail போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும், ஹீரோ மோட்டோகார்ப் ,விப்ரோ, பஜாஜ் ஆட்டோ, ஜிண்டால் ஸ்டீல், TCS போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் முடிவடைந்தன. பிப்ரவரி மாதத்தின் நான்கு சக்கர வாகன விற்பனை 25.7 சதவிகிதமும், இரு சக்கர வாகன விற்பனை சுமார் 4.5 சதவிகிதமும் குறைந்ததால் பொதுவாக வாகன உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் சரிவில் முடிவடைந்தன.

நிப்டி 5900ஐத் தாண்டி முடிவடைவது சாதகமாகத் தோன்றினாலும் நாளை வெளிவரும் ஜனவரி மாத தொழில் உற்பத்தி அறிக்கை (IIP), வியாழனன்று வரவிருக்கும் பணவீக்க அறிக்கை, அடுத்த வாரம் வெளிவரும் பணக்கொள்கையின் மீள்பார்வை அறிக்கையை ஒட்டியே பங்குச்சந்தைகளின் போக்கைக் கொஞ்சமாவது கணிக்க முடியும். முன்பணமாகக் கட்டப்படும் வரித்தொகையும் (Advanced Tax Payment ) சந்தையின் போக்கில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

GMR Infrastructure. ஹைதராபாத் விமான நிலையத்தில் உள்ள தனது 5 நட்சத்திர ஹோட்டலை விற்கப் போகிறது என்று வெளியான செய்தியை அடுத்து அந்நிறுவனப் பங்குகளின் விலை 2.5 சதவிகிதம் உயர்ந்தது. Amtek Auto நிறுவனம் ஜெர்மனியைச் சார்ந்த NeumayerTekfor குழுமத்தை வாங்கப் போகிறது என்று வெளியான செய்தியைத் தொடர்ந்து அந்நிறுவனப் பங்குகள் 7 சதவிகிதம் உயர்ந்தன. இன்றைய வர்த்தகத்தில் 1477 நிறுவனப் பங்குகள்  விலை குறைந்தும் 1394 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் 132 நிறுவனப் பங்குகள் விலையில் மாற்றங்கள் இல்லாமலும் முடிவடைந்தன


English Summary
After enjoying a fantastic rally in the previous week, the Indian equity benchmark indices took a breather on Monday as the Sensex and NSE Nifty ended flat.

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...