???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ 0 கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு! 0 கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்?: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி 0 சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் 0 எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி 0 மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் 0 கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு 0 சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல் 0 'பெரியார் குத்து' பாடலை வெளியிட்ட சிம்பு குழுவுக்கு பாராட்டு! 0 திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது! 0 முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்? தினகரன் கேள்வி 0 ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை 0 எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி 0 கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 0 வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்

Posted : புதன்கிழமை,   ஜனவரி   09 , 2019  23:11:14 IST

மாநிலங்களவையில் நிறைவேற்றம் பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.   
 
பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.
 
பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து 323 உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
 
இதையடுத்து மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதன்மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. 149 உறுப்பினர்களின் ஆதரவுடன் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு அதிமுக, திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 
இதன்படி ஆண்டுக்கு 8 லட்ச ரூபாய்க்குள் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் அல்லது 5 ஹெக்டேருக்கும் குறைவாக விவசாய நிலம் உள்ளவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும். 1000 சதுர அடிக்கு கீழ் சொந்த வீடு உள்ளவர்களுக்கும், நகராட்சிப் பகுதிகளில் 900 சதுர அடிக்கு குறைவான வீட்டுமனை உள்ளவர்களுக்கும், நகராட்சி அல்லாத பகுதிகளில் 1800 சதுர அடிக்கு குறைவான வீட்டுமனை உள்ளவர்களும் இச்சலுகையைப் பெறலாம்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...