???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் விஜயகாந்த்! 0 ஜெயலலிதா சகிச்சையின் போது உணவு செலவு மட்டும் ரூ.1.17 கோடி: அப்பல்லோ தகவல் 0 சபரிமலையில் 22- ந் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு 0 செய்தியாளர்களை சந்திக்க எப்போதும் அஞ்சியதில்லை: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் 0 சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்படும்: பிரதமர் 0 கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுக்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி! 0 ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு 0 எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து செயல்பாட்டுக்கு அரசு உதவும்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் 0 "ஆளுநர் மௌனம் காப்பது ஏன்?": அற்புதம் அம்மாள் கண்ணீர் 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

முன்னாள் அமைச்சர் துரைராஜ் மறைவு

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜனவரி   05 , 2014  20:45:55 IST

அதிமுக முன்னாள் அமைச்சரும் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க அவைத்தலைவருமான துரைராஜ், நேற்று இயற்கை எய்தினார்.

கிளைச்செயலாளர் பதவியில் தொடங்கி, சேடப்பட்டி தொகுதி மாணவர் அணி அமைப்பாளர், சேடப்பட்டி ஒன்றிய செயலாளர், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் முதலான பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார். அதேபோல், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராகவும், 2001--2006 மற்றும் 2006-2011 ஆகிய இரண்டு முறை சேடப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் துரைராஜ் இருந்துள்ளார். 

 

2001-ல் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர், மதுரை பேரையூர் அருகில் குழந்தைகளை மண்ணுக்குள் புதைத்து நடத்தப்படும் குழிமாற்றுத் திருவிழாவில் கலந்துகொண்டதற்காக, கடுமை கண்டங்களைச் சந்தித்தார். அதையடுத்து, அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 

 

அவரின் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:

மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் சி.துரைராஜ் உடல் நலக்குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். கட்சியின் மீதும், கட்சி தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த ஆரம்ப கால கட்சி தொண்டரான துரைராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...