அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 மத்திய அரசு கொடூரமாக நடந்துகொள்கிறது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் செப்.15-க்குள் உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 நிதிநிலை பற்றாக்குறை விவகாரம்: புதிய சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் 0 நீட் தேர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு; இதை மாற்ற முடியாது: எச்.ராஜா 0 மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் தங்கம் தென்னரசு 0 91 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது! 0 ஜூன் 24ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்! 0 யோகா நேபாளத்தில்தான் உருவானது: சர்மா ஒலி பேச்சு 0 திமுக அரசுக்கு கால அவகாசம் கொடுங்கள், நிச்சயம் நல்லாட்சி தருவார்கள்: கே.எஸ்.அழகிரி 0 கொரோனா தொற்றுக்கு நடிகை ரேஷ்மா மரணம் 0 தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு - எடப்பாடி பழனிசாமி 0 முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் நோபல் பரிசு பெற்று பொருளாதார நிபுணர்! 0 தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் - ஆளுநர் 0 தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் சட்டமன்ற கூட்டம் இன்று!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பிப்.6 - பங்குச்சந்தை

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   06 , 2013  17:38:45 IST

வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று காலையில் சற்று உயர்வுடனே துவங்கிய இந்தியப் பங்குச்சந்தைகள் அதன் பின்னர் சின்னச்சின்ன ஏற்ற தாழ்வுகளுடன் வர்த்தகமாயின. இறுதியில் சென்செக்ஸ் 20 புள்ளிகள் குறைந்து 19639லும் நிப்டி 2 புள்ளிகள் மட்டுமே அதிகரித்து 5959லும் முடிவடைந்தன. தொடர்ந்து மூன்று நாட்களாக 20000க்கு கீழாக சென்செக்ஸ்-ம் , 6000க்கு கீழாக நிப்டி-யும் முடிவடைவது, பங்குச்சந்தை சரியுமோ என்ற ஐயத்தை எழுப்புகிறது. இருப்பினும் நிப்டி 5950க்கு கீழாக சரியாதவரை பங்குச்சந்தை காளைகளின் பிடியில்தான் உள்ளது என்பதை உறுதிபடுத்திக் கொள்ளலாம்.

இன்றைய வர்த்தகத்தில் ஜிண்டால் ஸ்டீல், மாருதி சுஷூக்கி, HDFC, TCS , ஹிண்டால்கோ போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும், NTPC , Coal India, BHEL, ஹிந்துஸ்தான் யூனிலிவர், L & T போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின. பெரும்பாலான நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு நிதி அறிக்கைகள் வெளிவந்துவிட்ட நிலையில், பிப்ரவரி இறுதியில் வெளிவர இருக்கும் பட்ஜெட், அல்லது உலக பொருளாதார ரீதியில் வெளியாகும் செய்திகளின் சாதக பாதகங்களைப் பொறுத்தே பங்குச்சந்தையின் ஏற்றத் தாழ்வுகள் அமையும்.

இன்றைய வர்த்தகத்தில் மும்பைப் பங்குச்சந்தையில் 1514 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும், 1384 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் விற்பனையாயின. மொத்த வர்த்தகத்தொகை அடிப்படையில் Jubilaint Food Works நிறுவனப் பங்குகள் 121 கோடி ரூபாய்களுக்கு வர்த்தகமாகி முதல் இடத்தைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து யுனைடெட் ஸ்பிரிட்ஸ் , SBI மற்றும் Suzlon நிறுவனங்கள் அடுத்த மூன்று இடங்களைப் பிடித்தன. மொத்த எண்ணிக்கை அடிப்படையில் Suzlon, NHPC , யூனிடெக் மற்றும் Avance Technologies நிறுவனப் பங்குகள் முதல் நான்கு இடங்களைப் பிடித்தன.


English Summary
Key equities benchmarks continued to reel in trade today, ending Wednesday’s session on a flat note.

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...