???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மார்ச். 5 - பங்குச்சந்தை

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   05 , 2013  06:22:27 IST

இன்றைய வர்த்தகத்தில் இந்தியப் பங்குச்சந்தைகள் நல்ல உயர்வுடன் முடிவடைந்தன. சென்செக்ஸ் 265 புள்ளிகள் உயர்ந்து 19143ல் முடிவடைந்தது. இது அதிக பட்சமாக 19164ஐயும், குறைந்த பட்சமாக 18943ஐயும் தொட்டது. நிப்டி 86 புள்ளிகள் உயர்ந்து 5784ல் முடிந்தது. இது அதிகபட்சமாக 5790ஐயும் குறைந்தபட்சமாக 5722ஐயும் தொட்டது. உலக அளவில் அனைத்துப் பங்குச் சந்தைகளிலும் காணப்பட்ட ஏற்றம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.

வரும் நாட்களில் 5800 என்பது முக்கியமான நிலையாக இருக்கும் என்றும், நிப்டி இதனைத் தாண்டி நிலைப்ப்படும் பட்சத்தில்  5875 வரை உயரும் வாய்ப்புகள் உள்ளன என்றும், மீண்டும் 5750க்குக் கீழே சரியும் பட்சத்தில் 5690 வரை செல்லும் வாய்ப்புகள் உள்ளன என்றும் பங்குச்சந்தை நிபுணர்களின் கணிக்கின்றனர். இன்றைய வர்த்தகத்தில் ரியாலிட்டி, வங்கித்துறை மற்றும் வாகன உற்பத்தி நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்வுடன் முடிந்தன.

 சீனா 2013ஆம் ஆண்டுக்கான தனது பொருளாதார வளர்ச்சி 7.5 சதவிகிதமாகவும், பணவீக்க விகிதம் குறைந்து 3.5 சதவிகிதமாகவும் இருக்கும் என்று இலக்குகளை அறிவித்ததைத் தொடர்ந்து உலோகத்துறை நிறுவனங்களின் பங்குகளான ஸ்டெர்லைட், ஹிண்டால்கோ, டாட்டா ஸ்டீல் நிறுவனப் பங்குகள் உயர்ந்தன. கோத்ரெஜ் ப்ரோபெர்ட்டீஸ் நிறுவனம் மும்பையின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் ப்ராஜெக்ட்டான Godrej BKC பணிகள் தொடங்கப் பட்டுவிட்டன என்று அறிவித்ததைத் தொடர்ந்து அந்நிறுவனப் பங்கின் விலை 2.7 சதவிகிதம் வரை உயர்ந்தது. இன்று ஸ்டெர்லைட், ஹிண்டால்கோ, டாட்டா மோட்டார்ஸ், ICICI வங்கி மற்றும் விப்ரோ நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், பஜாஜ் ஆட்டோ, BHEL , ITC மற்றும் NTPC நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் முடிவடைந்தன.

இன்றைய மும்பைப் பங்குச்சந்தை வர்த்தகத்தில் 1680 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும், 1141 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் 112 நிறுவனப் பங்குகள் விலையில் மாற்றங்கள் இல்லாமலும் முடிவடைந்தன. நேற்று அமெரிக்கப் பங்குச் சந்தைகள் உயர்வில் முடிவடைந்ததை தொடர்ந்து ஆசியப் பங்குச் சந்தைகளும் உயர்வுடனே முடிந்தன. ஐரோப்பியப் பங்குச்சந்தைகளும் மதிய நிலவரப்படி உயர்வுடன் தொடங்கியுள்ளன.


English Summary
Indian equities rallied on Tuesday tracking global markets. Interest rate sensitives led the rally on hopes of rate cut later this month.

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...