???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பாஜகவில் இருந்து விலகினார் யஷ்வந்த் சின்ஹா! 0 தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்! 0 கர்நாடக தேர்தல்: முதல்வர் சித்தராமையா வேட்புமனுத் தாக்கல் 0 நிர்மலாதேவி விவகாரத்தில் CBI விசாரணை தேவை: வைகோ 0 எஸ்வி.சேகரின் கருத்து, அருவருக்கத்தக்கது: கனிமொழி 0 எச்.ராஜாவும், எஸ்.வி சேகரும் சைபர் சைக்கோக்கள்: அமைச்சர் ஜெயக்குமார் 0 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: மத்திய அரசு பரிசீலனை 0 சிவகார்த்திகேயன் படத்தில் இரண்டாவது காமெடியனாக களமிறங்கும் யோகி பாபு 0 குஜராத் கலவர வழக்கு: முன்னாள் அமைச்சர் மாயாபென் கோட்னானி விடுதலை! 0 அவதூறு கருத்துகள் பரப்பும் எச்.ராஜா மீது வழக்கு தொடரப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் 0 பேராசிாியை நிா்மலா தேவியை ஐந்து நாள் சி.பி.சி.ஐ.டி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி 0 கியூபாவின் புதிய அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு! 0 ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட விஜயகாந்த், தே.மு.தி.க.வினர் கைது! 0 பெண் பத்திரிகையாளர்கள் பற்றிய சர்ச்சைக் கருத்து: மன்னிப்பு கோரினார் எஸ்.வி.சேகர்! 0 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்யக்கோரி துணை ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அண்ணா பிறந்தநாள்- ஆயுள்சிறைவாசிகளை விடுவிக்க!’

Posted : திங்கட்கிழமை,   செப்டம்பர்   02 , 2013  01:28:06 IST

வரும் 15-ம் நாளன்று பேரறிஞர் அண்ணாவின் 105-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பத்து ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருப்போரை, விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார். 
 
இன்று, இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 
 
ஆயுள் தண்டனை அடைந்தோர், பத்து ஆண்டுகள் தண்டிக்கப்பட்டோர், சில குற்றப் பிரிவுகளில் தண்டனை பெற்றதைக் காரணம் காட்டி, 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள் கடந்தும் சிறையில் இருக்கின்றனர்.
 
வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரு சிறைவாசி, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தால், பரோல் விடுப்பு கிடையாது என்பதும், நியாயப்படுத்த முடியாத மனிதாபிமானம் அற்ற நடவடிக்கை ஆகும். 
 
விடுப்பில் செல்லும் சிறைவாசி, தவிர்க்க இயலாத காரணங்களால் குறிப்பிட்ட நாளில் சிறைக்குத் திரும்பி வர இயலாமல், ஓரிரு நாட்கள் தாமதம் ஏற்பட்டு விட்டால்கூட, இந்தியத் தண்டனைச் சட்டம், 224 பிரிவுகளின்கீழ் மேலும் தண்டிக்கப்படுகின்றனர். பொது மன்னிப்பில் அவர்கள் விடுவிக்கப்படுவதும் கிடையாது.  
 
இதனால், மரணத்தைவிடக் கொடுமையான மனத் துன்பங்களுக்கு ஆளாகி உள்ளனர். ஏற்கனவே நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்களை, மேலும் தண்டிப்பதைப் போல இந்த நடவடிக்கைகள் அமைகின்றன. அவர்களது குடும்பங்கள் சிதறி சின்னாபின்னமாகின்றன. 
 
இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில், 14 ஆண்டுகளுக்கு மேல் கைதிகளின் சிறைவாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற சட்டத்திருத்தம், இந்திய நாடாளுமன்றத்தில் வந்தபோது, அதனைக் கடுமையாக எதிர்த்து, கருத்துச் சொன்னது நான் மட்டுமே. 
 
நீண்ட நெடிய சிறைவாசத்தில் மனந்திருந்தியவர்கள், தங்கள் எஞ்சிய வாழ்நாளில் சுதந்திரக் காற்றை அனுபவிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...