அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்டோபர் 1-முதல் குற்றாலம், ஒகேனக்கல் அருவிகள் திறப்பு! 0 வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! 0 உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி 0 கேரளாவில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! 0 இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி 0 காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்! 0 வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரெய்லர்! 0 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு! 0 ராஜஸ்தானுக்கு எதிராக திணறும் டெல்லி அணி! 0 எஸ்.பி.பி.-க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் - பாடகர் சரண் 0 ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு - தொல்.திருமாவளவன் 0 கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி! 0 சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்! 0 இன்று மாலை வெளியாகிறது டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 0 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நாயைக் கொடூரமாக அடித்துக் கொன்ற இளைஞர்கள்: தாமாகவே முன் வந்து வழக்குப்பதிவு செய்த நீதிமன்றம்!

Posted : சனிக்கிழமை,   ஜுலை   03 , 2021  12:54:13 IST


Andhimazhai Image

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரில் அடிமலத்துரா பீச்சில் 9 வயதுடைய லேப்ரடார் வகை நாயை, மூன்று இளைஞர்கள் கயிறு கட்டி இழுத்து சென்று படகில் தலைகீழாக கட்டி வைத்து, துடிக்க துடிக்க கட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர்.

இந்த வீடியோ இணைய தளங்களில் வெளிவந்து வைரலானது. இதனையடுத்து #JusticeForBruno என்ற ஹேஷ்டேக் மூலம் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல் எழுப்பப்பட்டது. அந்த நாயின் உரிமையாளர் அளித்த புகார் அடிப்படையில், விழிஞ்சம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், நாயை அடித்துக்கொன்ற 3 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதனை கேரள உயர்நீதிமன்றம் தாமாகவே முன் வந்து வழக்குபதிவு செய்திருக்கிறது.  நாயின் நினைவாக புரூணோ என மனுவின் பெயரை நீதிபதிகள் ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் கோபிநாத் மாற்றி எழுதி விசாரணைக்கு எடுத்துள்ளனர்.

மனித கொடூர செயலுக்கு இரையான, உதவியற்ற நிலையில் இருந்த அந்த வளர்ப்பு நாய்க்கு சரியான அஞ்சலி செலுத்தும் வகையில் இது அமையும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விலங்குகளுக்கு எதிராக வருங்காலத்தில் இதுபோன்ற கொடூர சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் எனக் கேட்டு கொண்டது.

சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இந்த நாயின் உரிமையாளர் அளித்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய அறிக்கையை மாநில அரசு தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இதேபோன்று, மத்திய, மாநில அரசுகள் மற்றும் இந்திய விலங்குகள் நல வாரியம் ஆகியவற்றிற்கும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...