அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தீபாவளிக்கு இனிப்புகளை ஆவினிலேயே வாங்க வேண்டும் - வெ.இறையன்பு

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   26 , 2021  12:04:14 IST

தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு வழங்கும்பட்சத்தில் ஆவின் இனிப்பு வகைகளையே கொள்முதல் செய்து வழங்குமாறு அனைத்து துறை செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து வெ. இறையன்பு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது, “தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின் நிறுவனம்) தினம் சராசரியாக 41 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, உள்ளுர் விற்பனை போக, 27 லட்சம் லிட்டர் பாக்கெட் பாலாகவும், மீதமுள்ள ஆவின் பால் உப பொருட்களான தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர் மற்றும் பால்கோவா, மைசூர்பாகு, குலாப்ஜாமுன், ரசகுல்லா, லஸ்ஸி, மோர், சாக்லேட், ஐஸ் கிரீம் முதலான பால் பொருட்களையும் உயர்ந்த தரத்தில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.



மேலும் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்பு வகைகளை விற்பனை செய்து வருகின்றது. அவ்வகையில் 2021-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 11.10.2021 அன்று புதிய இனிப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



இவை அனைத்தும் சுகாதாரமான முறையில் ஆவினின் அக்மார்க் தரம் பெற்ற நெய்யினால் தயாரிக்கப்பட்ட இனிப்புகளாகும். பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு உதவி செய்யும் பொருட்டு, தங்கள் துறை சார்ந்த அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் தங்கள் துறை சார்பில் எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு வழங்கும்பட்சத்தில் ஆவின் இனிப்பு வகைகளையே கொள்முதல் செய்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.



மேலும், தங்கள் துறை சார்ந்த அலுவலகக் கூட்டங்களில் இனிப்பு வழங்கும்பட்சத்தில் ஆவின் இனிப்பு வகைகளையே கொள்முதல் செய்து வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...