அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில் 0 பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன் 0 நான் பேசியது சட்டத்துக்கு புறம்பானது இல்லை: கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் 0 செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்! 0 ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்! 0 அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் காலமானார்! 0 அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்!

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   30 , 2022  09:01:54 IST

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 6-ம் சட்டமன்றத் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலின்போது தி.மு.க தேர்தல் வாக்குறுதியில், மாநகர அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம், குடும்பத் தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய், சிலிண்டருக்கு 100 மானியம் உள்ளிட்ட பெண்களைக் கவரும் அறிவிப்புகளை தி.மு.க வெளியிட்டுள்ளது.
 
அதில், பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் மற்றும் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து, தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே 7-ம் தேதி பதவியேற்றார். பதவியேற்ற அன்று சட்டப்பேரவைக்குச் சென்ற மு.க.ஸ்டாலின் அப்போதே பெண்களுக்கு மாநகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் செய்வதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.
 
அதனையடுத்து, திருநங்கைகளுக்கும் இலசப் பயணம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கைவைத்த நிலையில் அந்த கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஓராண்டு காலத்துக்கும் மேலாக தமிழ்நாடு முழுவதும் சாதாரண மாநகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கப்பட்டுவருகிறது.
 
இந்த இலவசப் பயணம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக குறைந்த ஊதியத்துக்கு வீட்டு வேலை போன்ற பணிகளுக்குச் செல்லும் பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். தேசிய அளவிலும் இந்தத் திட்டத்துக்கு வரவேற்பு கிடைத்தது. இந்தநிலையில், மாநகரப் பேருந்திகளில் கடந்த ஓராண்டில் பெண்கள் 131 கோடி முறை இலவசப் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் 2,100 கோடி ரூபாய் செலவு என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...