அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்! 0 நாகலாந்து துப்பாக்கிச் சூடு: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை! 0 நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! 0 கோவை வேளாண். பல்கலையில் 80% பேர் தோல்வி; மாணவர்கள் போராட்டம்! 0 நாகலாந்து: தீவிரவாதிகள் என நினைத்து ராணுவம் தாக்குதல் 13 அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை! 0 ரஷ்ய அதிபர் புதின் இன்று டெல்லி வருகை 0 ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21-ஆக உயர்வு 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்: டிடிவி தினகரன் விளக்கம் 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்! 0 கன்னத்தில் அறைந்தார்: நடிகர் விஜய்சேதுபதி மீது புதிய வழக்கு! 0 போராடும் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமித்ஷா! 0 தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! 0 சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

விவசாயிகளை கொன்றவர்களை கைது செய்யாதது ஏன்? பிரியங்கா காந்தி வெளியிட்ட வீடியோ!

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   05 , 2021  13:35:31 IST

விவசாயிகள் மீது கார் ஏற்றி நசுக்கியவர்களை இன்னும் கைது செய்யாதது ஏன் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரியங்கா காந்தி பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.


அமைதியாகப் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் ஏற்றி நசுக்கிய வீடியோ காட்சியையும் அவர் ட்வீட் செய்துள்ளார்.


உத்தர பிரதேச மாநிலம் லட்சுமிபூரில் ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அம்மாநில முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறுவதற்கு நேற்று காலை உத்தர பிரதேசம் சென்ற பிரியங்கா காந்தி, காவல் துறையால் கைதுசெய்யப்பட்டார்.


அவரின் கைதுக்குக் காங்கிரஸ் கட்சி கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், பிரியங்கா காந்தி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் நரேந்திர மோடி ஐயா, உங்கள் அரசாங்கம் எந்த உத்தரவும் இல்லாமல் என்னை காவலில் வைத்துள்ளது. உணவு வழங்கும் விவசாயிகளை நசுக்கிய இந்த நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை. ஏன்?" என கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல், அவருடைய மொபைலில் இருந்து வீடியோ ஒன்றை காண்பிக்கிறார். அதில், சாலையில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளின் பின்புறம், வேகமாக வரும் கார் அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் செல்கிறது. அதன் தொடர்ச்சியாக இரண்டு கார்கள் அதேபோல செல்கின்றன. இந்த வீடியோவை டுவிட்டரில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...