அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்கள் இருந்தும் நோபல் பரிசு வெல்வதற்கான கண்டுபிடிப்பு நிகழ்த்தப்படாதது ஏன்? - ராமதாஸ்

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   06 , 2021  12:14:35 IST

இந்தியாவில் நோபல் பரிசு வெல்வதற்கான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படாதது ஏன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.


ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம்,இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த இரண்டு நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவம் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த சியுகுரோ மனாபே, ஜெர்மனை சேர்ந்த கிளாஸ் ஹாசெல்மேன், மற்றும் இத்தாலியை சேர்ந்த ஜார்ஜியோ பாரிசி ஆகிய மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக்குழு நேற்று அறிவித்தது.


இந்நிலையில், இந்தியாவில் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்கள் இருந்தும் நோபல் பரிசு வெல்வதற்கான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படாதது ஏன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, “இயற்பியல் துறைக்கான நோபல் பரிசை அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் விஞ்ஞானிகள் வென்றுள்ளனர். இந்தியாவில் 23 ஐஐடிகள், ஓர் ஐ.ஐ.எஸ்.சி, நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்கள் இருந்தும் நோபல் பரிசு வெல்வதற்கான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படாதது ஏன்?”என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...