செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
அக் ஷய திருதியையை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் மட்டும் 18 ஆயிரம் கிலோ தங்க நகைகள் விற்பனையாகி உள்ளன.
அக் ஷய திருதியையை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் மட்டும் 18 ஆயிரம் கிலோ தங்க நகைகள் விற்பனையாகி உள்ளன. அக் ஷய திருதியை தினத்தில் தங்கம் வாங்கினால், செல்வம் மேலும் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை. நேற்று, அக் ஷய திருதியை கொண்டாடப்பட்டது. இதற்காக, முன்னணி நகைக் கடைகள் மட்டுமின்றி, சிறிய கடைகளிலும் கூட, கூடுதல் தள்ளுபடி, குறைந்த செய்கூலி, பரிசு பொருட்கள் என, பல்வேறு சலுகைகள் முன்கூட்டியே அறிவித்தன. கொரோனா பாதிப்பால், இரண்டு ஆண்டுகளாக கடைகள் மூடப்பட்டு, ஆன்லைன் வாயிலாக தங்கம் வாங்கியோர், நேற்று நகை கடைகளுக்கு நேரடியாக சென்று, தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டினர். அவர்களின் வசதிக்காக, அதிகாலை முதலே நகை கடைகள் திறக்கப்பட்டன. முந்தைய வாரங்களில், 40 ஆயிரம் ரூபாயை தாண்டிய 22 காரட் ஆபரண தங்கம் சவரன் விலை, நேற்று 38 ஆயிரத்து 368 ரூபாயாக குறைந்திருந்தது. இரு தினங்களில் மட்டும் சவரனுக்கு 856 ரூபாய் சரிந்துள்ளது. இது, வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மாநிலம் முழுதும் உள்ள நகை கடைகளில் கூட்டம் அலைமோதியது.இதையடுத்து, நேற்று ஒரே நாளில், 18 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையானதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது, ஒரு கிலோ தங்கம் விலை 50 லட்சம் ரூபாய். இதன்படி, நேற்று மட்டும் 9,000 கோடி ரூபாய்க்கு தங்கம் விற்பனையாகி உள்ளதாக தெரிகிறது.