அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியது 0 2020-ல் இந்தியாவின் வறுமை இரட்டிப்பானது, கொரோனா 2-ம் அலையால் இன்னும் மோசமாகும்: ஆய்வில் தகவல் 0 நாட்டு மக்களுக்கோ பேரழிவு, மோடியின் நண்பர்களுக்கோ கொண்டாட்டம்: ராகுல் காந்தி 0 புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு 0 ஆடம்பர காரை விற்று கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சப்ளை: நெகிழ வைக்கும் ‘ஆக்ஸிஜன் மனிதன்’! 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஆதாரம் இல்லை: ரஜினிகாந்த் 0 வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் பழுதான சிசிடிவி கேமரா! 0 தடுப்பூசி விற்பனையில் தனித்தனியாக விலை நிர்ணயம் செய்கிறதா சீரம் நிறுவனம்? 0 இந்தியாவில் புதிய உச்சம்: 3 லட்சத்தை கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 மக்கள் உயிரிழக்கும்போது ஆக்சிஜன், தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது குற்றச்செயல் - ராகுல்காந்தி விமர்சனம் 0 கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் : கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்கள் அறிவிப்பு 0 மேற்குவங்கத்தில் இன்று 6ஆம் கட்ட வாக்குப்பதிவு 0 ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்! 0 சீன கப்பலை வெளியேற்றிய இலங்கை! 0 சீதாராம் யெச்சூரியின் மகன் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

முடிவுக்கு வந்த விபிஎஃப் விவகாரம் : புதிய படங்கள் ரிலீஸுக்கு ரெடி

Posted : புதன்கிழமை,   நவம்பர்   18 , 2020  21:21:02 IST

விபிஎஃப் கட்டண விவகாரத்தில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சந்தித்து வந்த சிக்கல் முடிவுக்கு வந்துவிட்டதாக நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்குக்கு பின் நவம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி கொடுத்தது. ஆனால், விபிஎஃப் கட்டணம் தொடர்பான சர்ச்சையில் படத்தை வெளியிட தயாரிப்பாளர் சங்கம் மறுத்தது.  இதனையடுத்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பளர்கள் சங்கம், QUBE நிறுவனம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் இடையே நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தற்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த இரண்டு மாதங்களாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், QUBE நிறுவனம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இடையே VPF கட்டணம் குறித்து பேச்சு வார்த்தை நடந்து வந்தது. அந்த பேச்சு வார்த்தை இன்று இனிதே முடிந்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், QUBE நிறுவனத்திற்கும், தமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

அதன் படி, QUBE நிறுவனம், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு தற்போது இருக்கும் கட்டணத்தில் கணிசமான சதவீதத்தை குறைத்துக் கொள்ள ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் செய்துள்ளது. 31/3/2021 தேதிக்குள், இந்த VPF பற்றிய ஒரு நிரந்தர தீர்வை மூன்று சாராரும் இணைந்து செய்து கொள்ளவும் இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்பட துறை இந்த கொரோனா கால பாதிப்பிலிருந்து மீண்டு வர வேண்டும், புதிய திரைப்படங்கள் வெளியாவதில் எந்த தடையும் இருக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், மூன்று சாராரும் இந்த சுமூகமான முடிவுக்கு வந்துள்ளனர்.

31/3/2021 தேதிக்குள், மூன்று சாராரும் இணைந்து VPF கட்டணம் பற்றிய ஒரு நிரந்தர தீர்வை எடுக்க உறுதி கொண்டுள்ளார்கள். அதன் மூலம், இந்த பிரச்சனை மீண்டும் தொடரக் கூடாது என்பதே அனைவரின் நோக்கம்.
இந்த ஒப்பந்தத்தில் மூலம், 31/3/2021 வரை தமிழ் சினிமாவில் புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை. அதிக எதிர்பார்ப்பில் உள்ள பல பெரிய பட்ஜெட் படங்களும், நடுத்தர மற்றும் சிறு பட்ஜெட் படங்களும் தடையில்லாமல் இனிமேல் வெளியாகும். அதன் மூலம், பார்வையாளர்களுக்கு புதிய படங்களை திரையரங்குகளில் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும். தமிழ் திரைப்படத்துறை அதன் மூலம் மொத்தமாக மீண்டு வர முடியும் என்று நாங்கள் மூன்று சாராரும் நம்புகிறோம்.

தமிழ் சினிமா மீண்டு வர எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்களுக்கும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட துறை சார்பிலும் மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...