அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அரசியல் நண்பர்களை வைத்து மிரட்டும் வைரமுத்து - பாடகி சின்மயி

Posted : புதன்கிழமை,   மே   26 , 2021  14:53:36 IST

பாடலாசிரியர் வைரமுத்து குறித்து தான் எழுப்பிய புகாருக்கு யாரும் செவிசாய்க்கவில்லை என்று பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.



இது தொடர்பாக அவர் எழுதியுள்ள பதிவில், “சட்டப்படி போங்க என்று கருத்து தெரிவித்துவிட்டு, இருக்கிற மக்களுக்கு NCW-ல வழக்குப் பதிவு செய்து, அவர்கள் 3 ரிமைண்டர்ஸ் கொடுத்து, ஒரு லேடி ஆபீசர் வீட்டுக்கு வந்து, என்னிடமும், என் தாயார், என் கணவர், மூன்று பேரிடமும் புகாரில் கையெழுத்து வாங்கி சென்றனர். மேடை மேடையா ஏறி ராதா ரவி அவர்கள் என்ன அவமானப்படுத்தியதும், அவசர அவசரமாக விசாரணை பண்ணாம என்ன தடை பண்ணது, எதனாலன்னு எல்லாருக்கும் தெரியும்.



இதுவரைக்கும் 17 பெண்கள் திரு வைரமுத்து அவர்களைபற்றி புகார் கொடுத்துள்ளார்கள். கிருபா என்பவர் பல பெண்கள் கிட்ட பேசி இந்த ரிப்போர்ட் பதிவு செய்திருக்காங்க. இதையெல்லாம் மறுப்பது ஏன்? ரைஹானா மேடம் அவர் அப்டித்தான்னு பேட்டி குடுப்பாங்க. மாலினி யுகேந்திரன் 'என் கண்ணு முன்னாடி நடந்தது’ன்னு சொல்லிருக்காங்க. புவனா சேஷன் - அவருக்கு ஒத்துழைக்கலன்னு அவங்க கேரியர் நாசம் பண்ணி விடடார்னு பேட்டி குடுத்துருக்காங்க, அமெரிக்காவில் இருந்து சிந்து ராஜாராம் மீடியாவில் பேட்டி குடுத்தாங்க.





அவர் நடத்துற ஹாஸ்டல்ல பெண்கள் தப்பிச்சு ஓடிடவேண்டிய நிலைமை வந்திருக்கு. எப்ப வேணும்னாலும் பெண்களின் அறைகளுக்குள் புகுந்து விடுவார்னு சொல்லிருக்காங்க. அதெல்லாம் மறைச்சுட்டு, சின்மயி மட்டும் தான் சொன்னாங்க, வேற யாருமே சொல்லலைன்னு என் பொய் சொல்றாங்க? ஏன்னு கேள்வி கேக்க கூடாதோ? "அறியப்படடவர்கள் மீது பழி சுமத்துவது வழக்கமாகிவிடாது"ன்னும், "ஆதாரங்களை வெச்ச்சுருக்கேன்"னு சொன்னவர், இத்தனை நாள்ள என் மேல கேஸ் போட்டுருக்கலாமே? அதெல்லாம் பண்ணுனா அவர் மன்னிப்பு குடுக்கறேன், என்ன பத்தி பேச வேண்டாம்னு சொல்லுன்னு சொன்ன போன்கால் எக்ஸ்போஸ் ஆகுமே



என்ன மட்டும் குறி வைத்து, என் வழக்கை விசாரிக்காமல், என்ன மட்டும் வேலை செய்ய விடாம தடை பண்ணுனது அயோக்கியத்தனம். அத நான் கேள்வி கேக்க கூடாதுன்னு சொல்றதும் அயோக்கியத்தனம் தான். இத்தனை நாள்ல ஒரு ஐசிசி செட் பண்ணிருக்கலாமே? தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்திருக்கலாமே? ஏன் பண்ணல? நான் என் குற்றக்காட்டுகளை முன்வைத்தப்போ பார்ப்பனர்களின் சதி, மோடியின் சதி, ரபேல் ஊழலிருந்து திசை திருப்ப பண்ண சதி, பப்ளிசிட்டி ஸ்டண்ட்ன்னு, முற்போக்கு, பெண்ணியவாதம் பேசும் அரசியல்வாதிகள் இஷ்டத்துக்கு பேசுனாங்க.



நக்கீரன் இதழில் பாஜக எனக்கு பெங்களூர்ல வீடு குடுத்து, கவிஞர் மேல அபாண்டமா பழி சுமத்த வெச்சாங்கன்னு கேவலமா பொய் சொன்னாங்க. தெரியாமத்தான் கேக்குறேன். இத்தனை பேர் இவருக்கு மட்டும் பொங்கும் கட்டாயம் என்ன? அவர் ஒரு பாடலாசிரியர் தானே? ஏன் இப்படி அடிச்சுக்குறீங்க? அவரோட அரசியல் நண்பர்கள் பெயரை பயன்படுத்தி பெண்களை அச்சுறுத்துறது, மெரட்டுறது உண்மைதான். இது பல ஆண்டுகளா ஓப்பனா நடந்துட்டு தான் இருக்கு. இதெல்லாம் யாரு மூடி மறைத்தாலும், இல்லவே இல்லைன்னு பொய் சொன்னாலும். நான் கேள்வி கேட்டுகிட்டே தான் இருப்பேன். என பதிவிட்டுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...