அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது உபா வழக்கு- பாஜக தலைவர்!

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   26 , 2021  19:51:46 IST

இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதைக் கொண்டாடியவர்கள் மீது உபா வழக்கு பாயும் என ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா தெரிவித்துள்ளார்.
 

நேற்று முன்தினம் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் வெற்றியை இந்தியாவில் உள்ள காஷ்மீர் மக்களும் கொண்டாடினர். இதனால் காஷ்மீரில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கடுமையாக விமர்சித்து பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வந்தனர்.


இதுதொடர்பாக, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி தனது ட்விட்டர் பக்கத்தில்,  “பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடிய காஷ்மீரிகள் மீது ஏன் இவ்வளவு கோபம்? சிலர் கொலைவெறிக் கோஷங்களையும் எழுப்புகிறார்கள். துரோகிகளைச் சுட வேண்டும் என்று கூறுகிறார்கள்.” என பதிவிட்டிருந்தார்.


இந்நிலையில், இதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ள அம்மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா, “மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்திக்கு தாலிபான் மனநிலை உள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசியதன் மூலம் அவர் பாவம் செய்துள்ளார். சிலர் இந்தியாவில் வாழ்கிறார்கள். இந்தியாவில் சாப்பிடுகிறார்கள். ஆனால் அவர்கள் இதயம் பாகிஸ்தானுக்காகத் துடிக்கிறது. இதற்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். இந்தியாவுக்கு எதிராக சதி செய்யும் எவரும் நசுக்கப்படுவார்கள். பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது உபா சட்டம் பாயும்” என்றார்.

 


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...