அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

Posted : புதன்கிழமை,   நவம்பர்   24 , 2021  10:54:31 IST

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
 
மத்திய அரசு கடந்த ஆண்டு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லி எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் சுமார் ஓராண்டாக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும் விவசாய சங்கங்களுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோதிலும், அவற்றில் எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை. சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முன்வந்தபோதிலும், சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து கோரி வந்தனர். இந்நிலையில், 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள், வரும் 29-ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் அறிவித்தார். நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலேயே  வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளுக்குப் பின்னரே போராட்டத்தைக் கைவிடுவோம் என்று விவசாயிகள் அறிவித்தனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று புதன்கிழமை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

இதில், வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதைத் தொடர்ந்து அந்த மசோதாக்கள் குளிர்கால கூட்டத்தொடரின்போது தாக்கல் செய்யப்படலாம் என தவல்கள் தெரிவிக்கின்றன.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...