தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள கன்னட படத்தின் டீசர் இன்று மாலை வெளியீடு!
Posted : வெள்ளிக்கிழமை, மே 27 , 2022 15:16:48 IST
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள கன்னட படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவல் துறை அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை, அரசியல் ஆசை காரணமாக தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக பாஜகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து அவர், அக்கட்சியின் தமிழக தலைவராக நியமிக்கப்பட்டார். அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வரும் அண்ணாமலை அரபி என்கிற கன்னட படத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார். இரு கைகளும் இல்லாமல் சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு சாதனைகளை படைத்த விஸ்வாஸ் என்கிற நீச்சல் வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது. இந்த படத்தில் நடித்ததற்காக அண்ணாமலை ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்த படத்தின் டீசர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.