அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்டோபர் 1-முதல் குற்றாலம், ஒகேனக்கல் அருவிகள் திறப்பு! 0 வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! 0 உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி 0 கேரளாவில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! 0 இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி 0 காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்! 0 வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரெய்லர்! 0 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு! 0 ராஜஸ்தானுக்கு எதிராக திணறும் டெல்லி அணி! 0 எஸ்.பி.பி.-க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் - பாடகர் சரண் 0 ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு - தொல்.திருமாவளவன் 0 கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி! 0 சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்! 0 இன்று மாலை வெளியாகிறது டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 0 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சேவையை நிறுத்திக் கொண்ட பிரபல யாகூ நிறுவனம்!

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   27 , 2021  10:29:01 IST

பிரபல 'யாகூ' நிறுவனம், இந்தியாவில், அதன் செய்தி இணையதள சேவையை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது.

புதிய அன்னிய நேரடி முதலீட்டு விதியின் கீழ், இந்தியாவில், 'டிஜிட்டல்' ஊடக நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு முதலீட்டு வரம்பை குறைத்ததை அடுத்து, யாகூ நிறுவனம் இந்த முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதையடுத்து, 'யாகூ செய்திகள், யாகூ கிரிக்கெட், நிதி, பொழுதுபோக்கு மேக்கர்ஸ் இந்தியா' ஆகிய சேவைகள் நிறுத்தப்படுகின்றன.

இவற்றில் நேற்றிலிருந்து உள்ளடக்கங்கள் எதுவும் இடம்பெறாது. இருப்பினும், இதனால் யாகூ மின்னஞ்சலைப் பயன்படுத்துபவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும், அதன் சேவைகள் வழக்கம் போலவே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபரில் நடைமுறைக்கு வரும் புதிய அன்னிய நேரடி விதிமுறைகளின்படி, இந்தியாவில் டிஜிட்டல் ஊடக நிறுவனங்களில், மத்திய அரசின் ஒப்புதலுக்கு உட்பட்டு, வெளிநாட்டு முதலீடுகள் 26 சதவீதம் வரை மட்டுமே இருக்கலாம். யாகூ நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளாக இத்தகைய சேவைகளை வழங்கி வந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...