![]() |
பிரதமர் மோடியை சந்தித்த டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர்!Posted : வியாழக்கிழமை, ஜனவரி 27 , 2022 15:42:33 IST
பிரதமர் மோடியை டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான என்.சந்திரசேகரன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்திய அரசுக்கு சொந்தமான விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் இந்தியா அதீத கடனிலும் தொடர் நஷ்டத்திலும் இயங்கி வரும் காரணத்தால், மோடி தலைமையிலான மத்திய அரசு ஏர் இந்தியாவை விற்பனை செய்யப் பல வருடங்களாக முயற்சி செய்து வரும் நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
பல போட்டிகள் மத்தியில் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா, ஏலத்தின் மூலம் வென்றுள்ள நிலையில், இன்று மத்திய அரசு டாடா குழுமத்திடம் மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் சொத்துக்களை ஒப்படைக்க உள்ளது.
|
|