அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கட்டா குஸ்தி: திரைவிமர்சனம்! 0 இந்தியா முழுமைக்கும் ஒரே மொழி அமல்படுத்துவதை நான் எதிர்க்கிறேன்: கிரண் ரிஜிஜு 0 தமிழகத்தில் அனைத்து கோவில்களில் செல்போன் பயன்படுத்த தடை! 0 தமிழகத்தில் 5 நாட்கள் மிதமான மழையே பெய்யும்! 0 அறப்போர் இயக்கத்துக்கு எதிராக நீதிமன்ற படியேறிய எடப்பாடி பழனிசாமி 0 பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி: ஆளுநர் விளக்கம் கேட்டு கடிதம் 0 வங்கிக் கணக்கு இல்லாத ரேசன் அட்டைதாரர்களுக்கு புதிய வங்கிக் கணக்கு தொடக்கம்: தமிழக அரசு 0 மும்பையில் தென்கொரிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை! 0 குஜராத் முதற்கட்ட தேர்தலில் 60.20% வாக்குப்பதிவு! 0 ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் 21 மசோதாக்கள்: அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு 0 கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை டிபியாக வைத்து 40 லட்சம் ஏமாற்றிய பெண்! 0 பாகிஸ்தானை பதம்பார்த்த இங்கிலாந்து! ஒரே நாளில் 506 ரன்கள் குவித்து உலகசாதனை! 0 தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை! 0 'கடைமையை செய்யாமல் தேவையில்லாதவற்றை ஆளுநர் பேசுகிறார்' – கி.வீரமணி 0 ஆன்லைன் ரம்மி தடை விவகாரம்: கவர்னருடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்திப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தேசிய விருது பெற்ற தமிழ் நடிகர்கள்: மனைவி ஜோதிகா குறித்து சூர்யா நெகிழ்ச்சி!

Posted : சனிக்கிழமை,   அக்டோபர்   01 , 2022  10:27:25 IST

68ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் நடிகர்கள் சூர்யா, ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா என பலர் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.

 
கடந்த 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த பின்னணி இசைக்கான விருது சூரரைப் போற்று படத்துக்காக ஜி.வி.பிரகாஷூக்கும், சிறந்த நடிகராக சூர்யாவும், சிறந்த நடிகைக்காக அபர்ணா பாலமுரளிக்கும் அறிவிக்கப்பட்டன.

 
இவை தவிர சிறந்த துணை நடிகையாக லக்ஷ்மி பிரியா சந்திரமௌலியும், சிறந்த திரைக்கதைக்கான விருது சூரரைப் போற்று படமும், சிறந்த வசனத்துக்காக மண்டேலா படத்துக்காக மடோனா அஸ்வினும் தேர்வு செய்யப்பட்டனர்.

 
இந்நிலையில் 68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில்  சூர்யா, ஜி.வி.பிரகாஷ், அபர்ணா முரளி, ஜோதிகா, மடோனா அஸ்வின் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

 

விருது பெற்றது குறித்து சூர்யா பேசியதாவது : “எப்பவுமே என் மனைவியோட முடிவு சரியாகவே இருக்கும். எப்போ நான் குழப்பமடைந்து இருந்தாலும், ஒரு ஸ்கிரிப்ட்டை பார்த்த உடனே, அது சரியா இருக்குமா இல்லையா என்பதை ஜோ சொல்லிருக்காங்க. இது பலமுறை நடந்திருக்கு. காக்க காக்க, பேரழகன் என பல படங்கள் அவ்வாறு நடந்திருக்கின்றன. சூரரைப் போற்று படமும் அவ்வாறு நடந்தது தான்.

 

கதையை கேட்டவுடன், இதை கண்டிப்பா பண்ணலாம்னு சொல்லி, அந்த கதைக்குள் நான் செல்வதற்கு முன் ஜோவோட மனசும் இதுல இருந்துச்சு. அவுங்க மேடையில் தேசிய விருதை வாங்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. என்னுடைய நலவிரும்பிகளுக்கும், என்னுடைய அன்பான ரசிகர்களுக்கும் நன்றி. இந்த விருது என்னுடைய ரசிகர்களுக்கும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் சமர்பிப்பதாக” என்றார்.



 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...