அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

வந்தியத்தேவன் கதாபாத்திரத்துக்கு ரஜினியை தேர்வு செய்த ஜெயலலிதா!

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   07 , 2022  22:58:40 IST


Andhimazhai Image

வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் ரஜினி காந்த்,  கமல்ஹாசன் தெரிவித்துள்ளனர்.


சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், “எங்கிருந்து இதை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. பொன்னியின் செல்வன் கதையை எம்.ஜி.ஆர் வாங்கி வைத்திருந்தார். நான் சென்று அவரிடம், அந்தக் கதையைக் கேட்டதற்கு,‘சீக்கிரம் எடுத்துவிடு’ என்றார். அப்போது புரியவில்லை. ஆனால், அந்த எண்ணம் அனைவருக்கும் வந்து விட்டது. நான் முயற்சி செய்தேன். ஆனால், என்னால் எடுக்க முடியவில்லை. அந்த வருத்தம் எனக்கு உள்ளது.மணிரத்னம் வெற்றி பட்டியலில் முக்கிய படமாக இது இருக்கும். மேடை அலங்காரத்திற்காக நான் இதை சொல்லவில்லை.

 
ஷோலே மாதிரி ஒரு படம் எடுக்க முடியுமா என்று நினைத்து இருக்கிறோம்.அது மாதிரி தான் இந்த படம்.இது ஒரு சிறிய குடும்பம்.இதில் பொறாமைப் பட நேரமில்லை. அதை இளம் வயதில் புரிந்து கொண்டவர்கள் நானும் ரஜினியும்.வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில் ரஜினியை நடிக்க வைக்க வேண்டும் என சிவாஜி சொன்னார்.அதற்கு சாட்சி இங்கிருக்கும் பிரபு தான். அதை கேட்ட எனக்கு ஷாக்கா இருந்தது. என்னா, அந்த கேரக்டரில் நான் நடிக்க வேண்டும் என்றிருந்தேன். சரி சிவாஜி சாரே ரஜின்னு சொல்லிட்டாரேன்னு அதை விட்டு விட்டு.. அப்ப எனக்கு என்ன கேரக்டர்ன்னு கேட்டேன்? நீ அருண்மொழி வர்மன் கேரக்டர் செய் என்றார். அது அன்று நடக்காமல் போனது. இன்று, ரஜினி செய்ய நினைத்த கேரக்டரில் கார்த்தியும், எனக்கான கேரக்டரில் ஜெயம் ரவியும் நடிக்க கிடைத்துள்ளது. வெற்றி வரும், தோல்வி வரும் ஆனால், அதை புரிந்து கொள்ள வேண்டும். ஏ.ஆர்.ரகுமானின் ஒவ்வொரு பாட்டும் என்னுடைய இதயத் துடிப்பை அதிகரித்தது. நீங்கள் எனக்காகப் போட்ட பாடலை நான் திரும்பத் திரும்ப கேட்டு வந்தேன்” என்றார்.

அவரைத் தொடர்ந்து கரகரத்த குரலில் பேசத் தொடங்கிய ரஜினிகாந்த், கோல்டாக இருப்பதால் குரல் சரியாக இல்லை என்று சொல்லி, பேச்சத்தொடங்கினார், “ சுமார் 70 வருடத்திற்கு முன்பாக கல்கி பத்திரிகையில் ஐந்தரை வருடம் ’பொன்னியின் செல்வன்’நாவல் தொடராக வந்தது. அந்த புத்தகம் வரும் போது பெரிய ஸ்டார் ஹீரோவுக்கு முதல் நாள், முதல் ஷோ டிக்கெட் வாங்க எப்படி கஷ்டப்படுவாங்களோ, அதே போல அந்தப் பிரதிய வாங்க வாசகர்கள் துடிச்சாங்க. அந்த மாதிரி புரட்சி செஞ்ச கதைதான் ’பொன்னியின் செல்வன்’.

நான் புத்தகம் நிறைய படிப்பேன். எல்லாரும் ’பொன்னியின் செல்வன் படிச்சிருக்கீங்களா?’ன்னு எங்கிட்ட கேட்பாங்க. என் பழக்கம் என்னன்னா, புத்தகம் எத்தனை பக்கம்னு கேட்பேன். 200, 300 பக்கம்னா ஓகே. அதுக்கு மேலனா தொடவே மாட்டேன். அதனால ’பொன்னியின் செல்வன்’ எத்தனை பக்கம்னு கேட்டேன். எத்தனை பக்கமா? அது 5 பார்ட்டுங்க, 2000 பக்கம் வரும்னு சொன்னாங்க. ’அட போய்யா’ன்னு சொல்லிட்டு விட்டுட்டேன்.பிறகு 80- கள்ல ஒரு பத்திரிகையில், ’பொன்னியின் செல்வன்’ படத்தை இப்ப எடுத்தா, வந்தியத் தேவன் கேரக்டருக்கு யார் பொருத்தமா இருப்பாங்க?’ன்னு வாசகர் ஒருத்தர் கேட்ட கேள்விக்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பதில் சொன்னாங்க. அதுல ’ரஜினிகாந்த்’ அப்படின்னு ஒரே வரியில சொல்லியிருந்தாங்க. இப்படி சொன்ன உடனேயே குஷியாயிடுச்சு. ஜெயலலிதாவே சொல்லிட்டாங்கன்னா, அந்த கேரக்டர் எப்படி இருக்கும்னு ’பொன்னியின் செல்வனை’ படிக்க ஆரம்பிச்சேன். படிச்சு முடிச்சதும் அமரர் கல்கி இருந்திருந்தா அவங்க வீட்டுக்குப் போயி அவர் கால்ல சாஷ்டாங்கமா விழுந்திருப்பேன்.

தமிழ் சினிமா ஜாம்பவான்களான மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரமோ, எஸ்.எஸ்.வாசனோ இதை படமாக்கலை. எம்.ஜி.ஆர், கமல் கூட முயற்சி பண்ணினாங்க. இதை யாராவது படமா எடுக்கமாட்டாங்களான்னு ரசிகர்கள் துடிச்சுட்டு இருந்தாங்க. இப்ப மணிரத்னம் இயக்கி இருக்கார். இதுல என் பங்களிப்பும் இருக்கணும்னு நினைச்சு, மணிரத்னம்கிட்ட எனக்கொரு கேரக்டர் கொடுங்கன்னு கேட்டேன். அவர் உங்க ரசிகர்களுக்கு யார் பதில் சொல்றதுன்னு ஒத்துக்கவே இல்லை. பெரிய பழுவேட்டரையர் கேரக்டராவது நான் பண்றேனேன்னு சொன்னேன். அவர் ஒத்துக்கவே இல்லை. உங்களை அப்படி பயன்படுத்தவே மாட்டேன்னு சொல்லிட்டார். மற்றவர்கள் என்றால் கண்டிப்பாக பயன்படுத்தி இருப்பாங்க. அதனாலதான் மணிரத்னம் சிறந்த இயக்குநராக இருக்கிறார். இந்தப் படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.


 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...