![]() |
மாவீரர்கள் நாள்: நினைவுச் சின்னங்கள் உடைப்பு; பத்திரிகையாளர் மீது தாக்குதல்!Posted : செவ்வாய்க்கிழமை, நவம்பர் 30 , 2021 12:11:50 IST
இலங்கை ராணுவத்தினர் தமிழர்களின் மாவீரர் நாள் நினைவுச் சின்னங்களைத் தகர்த்துள்ளதோடு, பத்திரிகையாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரனையும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
அந்தவகையில், இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடந்த நவம்பர் 27-ஆம் தேதி மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளை முடக்கும் வகையில் இலங்கை ராணுவமும் போலீசாரும் தமிழர்கள் மீது பல்வேறு கெடுபிடிகளைப் பிரயோகித்துள்ளனர். அதேபோல், சில இடங்களில் மாவீரர் நினைவுச் சின்னங்களை இலங்கை ராணுவத்தினர் தகர்த்துள்ளனர்.
அதேபோல், முள்ளி வாய்க்கால் பகுதியில் மாவீரர் நாள் குறித்த செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் விஸ்வலிங்கம் விஸ்வசந்திரனை இலங்கை ராணுவத்தினர் கடுமையாகத் தாக்கி உள்ளனர். இலங்கை ராணுவத்தின் இத்தாக்குதலுக்கு பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
|
|