அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்டோபர் 1-முதல் குற்றாலம், ஒகேனக்கல் அருவிகள் திறப்பு! 0 வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! 0 உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி 0 கேரளாவில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! 0 இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி 0 காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்! 0 வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரெய்லர்! 0 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு! 0 ராஜஸ்தானுக்கு எதிராக திணறும் டெல்லி அணி! 0 எஸ்.பி.பி.-க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் - பாடகர் சரண் 0 ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு - தொல்.திருமாவளவன் 0 கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி! 0 சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்! 0 இன்று மாலை வெளியாகிறது டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 0 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி!

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   29 , 2021  10:12:24 IST

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
 
 
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இந்திய வீரர் குர்னால் பாண்ட்யாவுக்கு கொரோனா உறுதியானதால் ஒத்திவைக்கப்பட்ட இரண்டாவது போட்டி, கொழும்புவில் நடந்தது. இந்திய அணியில் தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், நிதிஷ் ராணா, சேட்டன் சக்காரியா என, 4 பேர் அறிமுகமாகினர். டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது.
 
 
இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், கேப்டன் ஷிகர் தவான் ஜோடி நல்ல துவக்கம் தந்ததனர். இந்திய அணி சார்பில் ருதுராஜ் (21) ரன்களும், தவான் (40) ரன்களும், தேவ்தத் படிக்கல் (29) ரன்களும் எடுத்தனர். இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 132 ரன் எடுத்தது. 
 
 
அடுத்துக் களமிறங்கிய இலங்கை அணியில் மினோத் பானுகா (36) ரன்களும்,  தனஞ்செயா டி சில்வா (40) ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டன. சக்காரியா வீசிய 20வது ஓவரின் முதல் 4 பந்தில் 8 ரன் கிடைத்தது. இலங்கை அணி 19.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 133 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தனஞ்செயா டி சில்வா, சமிகா கருணாரத்னே அவுட்டாகாமல் இருந்தனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...