அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இனவெறி எதிர்ப்புக்கு ஆதரவுத் தெரிவிக்காத டி காக் அணியிலிருந்து நீக்கம்! 0 பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது உபா வழக்கு- பாஜக தலைவர்! 0 பாஜகவை சேர்ந்த கல்யாண ராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! 0 நாளை மாலை வெளியாகும் அண்ணாத்த படத்தின் ட்ரைலர்! 0 “வழக்கமான அலுவல் பணிகளை சர்ச்சையாக்குவது சரியானது அல்ல” - வெ.இறையன்பு 0 நீர்வீழ்ச்சியில் சிக்கிய தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்கள்! 0 அதிகரிக்கும் கொரோனா தொற்று: சீனாவில் மீண்டும் ஊரடங்கு! 0 தீபாவளிக்கு இனிப்புகளை ஆவினிலேயே வாங்க வேண்டும் - வெ.இறையன்பு 0 அதிக நச்சு வாயுக்களை வெளியிடும் அனல்மின் நிலையங்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! 0 கிரிக்கெட் வீரார் ஷமிக்கு எதிரான அவதூறு பதிவுகள் நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்! 0 3,087 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் அமைப்பு: அமைச்சர் சேகர்பாபு 0 “முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதியை திமுக செயல்படுத்தப்படவில்லை” - கமல்ஹாசன் 0 சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை: கே.பி.முனுசாமி 0 2022 சட்டப்பேரவை தேர்தல்: சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம்! 0 இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

காட்டுப்பாக்கத்தில் கண்கவரும் பறவைகள்!

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   30 , 2021  16:10:39 IST


Andhimazhai Image

இரைச்சலும் புழுதியும் நிறைந்த சென்னை நகரைத் தாண்டி தெற்கு நோக்கிச் செல்கையில் பொத்தேரி என்ற சிறு ரயில் நிலையம் வரும். இதன் அருகே உள்ளது கால்நடைப் பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான காட்டுப்பாக்கம் கால்நடைப் பண்ணை. 700 ஏக்கர் பரப்பில் இருக்கும் இந்த வளாகத்தில் முதுகலை கால்நடை அறிவியல் ஆராய்ச்சி மையம் இருக்கிறது.


இந்த பண்ணை ஓர் அழகான இடம். குறுங்காடுகள், ஏராளமான ஏரிகள் நிறைந்த இடம். எனவே உள்ளே பரந்து விரிந்த இடத்தில் பறவைகளுக்கும் சிறு விலங்குகளுக்கும் பஞ்சமே இருக்காது.


2016 -இல் இந்த பறவைகளைக் கணக்கிட ஒரு முயற்சி நடந்தது. அதில் பங்கேற்ற இரு பேராசிரியர்களுக்கு ஓர் எண்ணம் தோன்றுகிறது. இங்குள்ள எல்லா பறவைகளையும் படமெடுத்து ஆவணப்படுத்தினால் என்ன? உடனே களமிறங்குகிறார்கள் உயிர்களின் மேல் இயற்கையாகவே நேசம் கொண்ட மனிதர்களான இவர்கள்.


ஓய்வு நேரங்கள் முழுக்க புதர்ப்பகுதிகளில் காமிராவுடன் அலைந்து திரிந்ததில் இந்த பண்ணையில் மட்டும் 140 பறவைகள் இருப்பதை அறிகிறார்கள். அதுமட்டும் போதுமா? ஒவ்வொரு பறவையும் எப்படிக் குரலெழுப்பும் என்பதை அங்கேயே பதிவு செய்கிறார்கள்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகமாக பறவைகள் காணப்படும் 100 இடங்களில் இவர்களின் ஆவணப்படுத்தல் முயற்சிக்குப் பின் இந்த பண்ணை 18வது இடத்தில் இருக்கிறது.


தமிழ்நாடு கால்நடை மருத்துவக்கல்லூரி பேராசிரியர்களான சி. ஸ்ரீகுமார், ஆர்.வெங்கடரமணன் ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கி இருக்கும் இந்த நூல் பிரமிப்பை வரவழைக்கிறது. பறவைகளைப் பார்ப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் எல்லோருக்கும் பெரும் ஆர்வத்தையும் மகிழ்வையும் உருவாக்க வல்லதாக இது இருக்கிறது.


அழகிய படங்களுடன் அருகிலேயே ஒரு க்யூ ஆர் கோடும் கொடுத்துள்ளனர். ஸ்கேன் செய்தால் அந்த பறவைகளின் ஓசையைக் கேட்டும் மகிழலாம்.


குயில்களில்தான் எத்தனை வகைகள்? சுடலைக் குயில், அக்கா குயில், சாம்பல் குயில்…


சில்லைகள் எத்தனை? புள்ளிச் சில்லை, சிவப்பு சில்லை, கருந்தலை சில்லை, வெண்முதுகுச் சில்லை, தொண்டை சில்லை..


ஆந்தைகள்,மைனாக்கள், சிட்டுகள், நீர்க்குருவிகள், வாத்துகள்.. அடடா ஒரு மாபெரும் பறவைச் சரணாலயமே அல்லவா இந்த பண்ணைக்குள் இருக்கிறது!


பறவை ஆர்வலர்கள் தவறவிடக்கூடாத புத்தகம். பறவைகளின் அறிவியல் பெயர்களுடன் தமிழ்ப்பெயர்களையும் தேடிக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விலைமதிக்க இயலாத வண்ண அனுபவங்களின் தொகுப்பு இது.  வழுவழு தாளில் காபிடேபிள் புத்தக வடிவில் உருவாகி உள்ளது.

விலை: ரூ 3000 (மென் அட்டை), ரூ 3500 ( கடின அட்டை)

         
Wings and Songs, An illustrated book on the birds of Postgraduate research Institute in Animal sciences, Kattupakkam, C.Sreekumar and R.Venkataramanan.

தொடர்புக்கு: 

பேராசிரியர் டாக்டர் ஸ்ரீகுமார் 9841906211,
 பேராசிரியர் டாக்டர் வெங்கடரமணன்  9443030707

மின்னஞ்சல்: sreesnake@gmail.com

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...