அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்டோபர் 1-முதல் குற்றாலம், ஒகேனக்கல் அருவிகள் திறப்பு! 0 வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! 0 உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி 0 கேரளாவில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! 0 இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி 0 காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்! 0 வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரெய்லர்! 0 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு! 0 ராஜஸ்தானுக்கு எதிராக திணறும் டெல்லி அணி! 0 எஸ்.பி.பி.-க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் - பாடகர் சரண் 0 ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு - தொல்.திருமாவளவன் 0 கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி! 0 சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்! 0 இன்று மாலை வெளியாகிறது டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 0 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மம்தா பேனர்ஜியை கரம் பிடிக்கும் சோசலிசம்!

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுன்   11 , 2021  16:34:20 IST


Andhimazhai Image

சேலம் மாவட்டத்தில் ஜூன் 13ஆம் தேதி அன்று திருமணம் ஒன்று நடைபெற உள்ளது. அந்த திருமணத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனும், மக்களவை உறுப்பினர் சுப்பராயனும் வருகை தர உள்ளதாக அந்த திருமண பத்திரிக்கையில் அச்சிடப்பட்டுள்ளது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், திருமண வாழ்க்கையைத் தொடங்க இருக்கும் மணமகனின் பெயர் சோசலிசம், அவரை மணம் புரிய இருக்கும் மணமகளின் பெயர் மம்தா பேனர்ஜி. இந்த பெயரின் சுவாரஸ்யம் இவர்களோடு முடியவில்லை. மணமகன் சோசலிசத்தின் குடும்பமே அப்படியான பெயர்களைத்தான் கொண்டுள்ளது. சோசலிசத்திற்கு இரண்டு அண்ணன்கள். மூத்த அண்ணனின் பெயர் கம்யூனிசம், இரண்டாவது அண்ணனின் பெயர் லெனினிசம். இதற்கிடையில், மார்க்சிசம் என்று ஒருவர் இருக்கிறார். அவர் யாரென்று பார்த்தால் கம்யூனிசத்தின் மகன் ஆவார்.


சோசலிசத்தின் தந்தை ஏ.மோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் வீரபாண்டி தொகுதியில் போட்டியிட்டார்.


பெயர் வைத்தது குறித்து மோகன் கூறுகையில், ”90களில் சோவித் யூனியன் உடைந்தபோது கம்யூனிசம் என்ற கட்சி உலகில் இனி இருக்காது என்றார்கள். அதை செய்திகளில் பார்த்ததும் மனம் வருந்தினேன். இதனால், எனது முதல் பிள்ளைக்கு கம்யூனிசம் என்று பெயரிட்டேன். இரண்டாவதாகப் பிறந்த குழந்தைக்கு லெனினிசம் என்றும், மூன்றாவது குழந்தைக்கு சோசலிசம் என்றும் பெயரிட்டோம். பெண் குழந்தை என்றால் அதற்கு மார்க்சியா என பெயரிட விரும்பினேன்” என்றார்.


மணமகன் சோசலிசம், “நான் மட்டுமல்ல, எங்கள் சகோதரர்களும் பள்ளி நாட்களில் எங்கள் பெயர்களால் நிறைய அவமானங்களை எதிர்கொண்டோம். இருப்பினும், கல்லூரிக்குப் போன பிறகு பெருமையாக இருந்தது. எல்லோரும் என்னை தனியாகப் பார்ப்பார்கள்” என்றார்.


மணமகள் மம்தா பேனர்ஜியின் பெற்றோர் பழனிசாமி - நீலாம்பாள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். எதிர் எதிர் கொள்கை நிலைப்பாடு கொண்ட தம்பதிகள் திருமணத்தில் சங்கமிக்கும் நிகழ்வு சமூகத்திற்கு ஆரோக்கியமானதே.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...