அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில் 0 பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன் 0 நான் பேசியது சட்டத்துக்கு புறம்பானது இல்லை: கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் 0 செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்! 0 ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்! 0 அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் காலமானார்! 0 அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சிவாஜி கணேசன் சொத்து: பிரபு ராம்குமாருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   07 , 2022  11:47:20 IST

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சொத்துக்களைப் பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோருக்கு எதிராக அவரது சகோதரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

 
சிவாஜி கணேசன் தான் நடிகராக இருந்தபோது பல இடங்களில் சொத்துக்கள் வாங்கி இருந்தார். அதன் இன்றைய மதிப்பு சுமார் 271 கோடி ஆகும். சிவாஜி கணேசன் மறைவுக்கு பின்னர், அவரது வாரிசுக்கள் அவருடைய சொத்துக்களை அனுபவித்து வருகின்றன.

 
இந்நிலையில், தங்களுக்கு தெரியாமல் சில சொத்துக்களை நடிகர் பிரபு மற்றும் அவரது அண்ணன் ராம்குமார் ஆகியோர் விற்று விட்டதாகவும் சில சொத்துக்களை அவர்களுடைய மகன்களின் பெயருக்கு மாற்றம் செய்து விட்டதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவாஜியின் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

 
அதில், தன்னுடைய தந்தை சிவாஜி சம்பாதித்த சொத்து தொடர்பாக அவர் உயில் எழுதி வைக்காத நிலையில், பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஜோடிக்கப்பட்ட உயில் தயாரித்து தங்களை ஏமாற்றி விட்டதாக தெரிவித்துள்ளனர்.

 
மேலும், தங்களின் தாய் வழி சொத்துக்களிலும் தங்களுக்கு பங்கு வழங்கவில்லை எனவும் அவர் சேர்த்து வைத்த சுமார் 10 கோடி மதிப்புள்ள 1000 சவரன் தங்கம், வைரம் மற்றும் வெள்ளி பொருட்களையும் தங்களுக்கு தராமல் ஏமாற்றி விட்டதாக தெரிவித்துள்ளனர்.

 
இதே போல் கோபாலபுரதில் இருந்த வீட்டை 5 கோடி ரூபாய்க்கு பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் விற்று விட்டதாகவும் இராயபேட்டையில் உள்ள 4 வீடுகள் மூலம் வரும் வாடகையில் கூட தங்களுக்கு எந்த பங்கும் வழங்குவதில்லை என தெரிவித்துள்ளனர்.

 
இந்து வாரிசுரிமை சட்டத்தில் 2005 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தம் காரணமாக தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கும் உரிமை உள்ளதால் இந்த பிரச்சனையில் நீதிமன்றம் தலையிட்டு பாகப்பிரிவினை செய்து தர உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

 
இந்த வழக்கில் பிரபு மற்றும் ராம்குமாரின் மகன்கள் விக்ரம் பிரபு மற்றும் துஷ்யந்த் ஆகியோரையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளன.

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...