![]() |
மூத்த பத்திரிகையாளர் ப்ரியா கல்யாணராமன் மறைவு!Posted : புதன்கிழமை, ஜுன் 22 , 2022 17:41:40 IST
மூத்த பத்திரிகையாளரும் குமுதம் வார இதழின் ஆசிரியருமான ப்ரியா கல்யாணராமன் (வயது 56) மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.
ராமச்சந்திரன் என இயற்பெயர் கொண்ட ப்ரியா கல்யாணராமன் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கலை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் குமுதம் வார இதழில் பல ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றியவர். குமுதம் வார இதழில் 21 வயதிலேயே பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கினார். குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பி.யால் பத்திரிகை உலகத்துக்கு அடையாளம் காட்டப்பட்டவர் ப்ரியா கல்யாணராமன்.
|
|