அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்! 0 நாகலாந்து துப்பாக்கிச் சூடு: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை! 0 நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! 0 கோவை வேளாண். பல்கலையில் 80% பேர் தோல்வி; மாணவர்கள் போராட்டம்! 0 நாகலாந்து: தீவிரவாதிகள் என நினைத்து ராணுவம் தாக்குதல் 13 அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை! 0 ரஷ்ய அதிபர் புதின் இன்று டெல்லி வருகை 0 ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21-ஆக உயர்வு 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்: டிடிவி தினகரன் விளக்கம் 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்! 0 கன்னத்தில் அறைந்தார்: நடிகர் விஜய்சேதுபதி மீது புதிய வழக்கு! 0 போராடும் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமித்ஷா! 0 தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! 0 சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நாக சைதன்யாவுடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கிய சமந்தா!

Posted : சனிக்கிழமை,   அக்டோபர்   30 , 2021  12:58:43 IST

நாக சைதன்யாவுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து சமந்தா அதிரடியாக நீக்கியுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யாவும் சமந்தாவும் சமீபத்தில் பிரிவதாக அறிவித்தனர். இருவரது பிரிவு குறித்து சில ஊடகங்கள் வதந்திகளை பரப்பின. விவாகரத்து என்பது வலி நிறைந்தது. என்னை அதிலிருந்து வெளியே வர அனுமதியுங்கள் என சமந்தாவும் கோரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும் வதந்திகள் தொடர்ந்தன.

அதனைத் தொடர்ந்து, சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிவதாகக் கூறி வெளியிட்ட பதிவில் இருவரும் நண்பர்களாக தொடர்வோம் என்று குறிப்பிட்டிருந்தனர். அதற்கேற்ப சமந்தா, நாக சைதன்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்காமல் வைத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது அவரது சமூக வலைதளங்களில் இருந்து தனிப்பட்ட முறையில் நாக சைதன்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மட்டும் சமந்தா நீக்கியுள்ளார். நாக சைதன்யாவின் குடும்பத்தினருடன் இருக்கும் படங்கள், நாக சைதன்யா மற்றும் நண்பர்களுடன் இருக்கும் படங்கள் எல்லாம் இன்ஸ்டாகிராமில் இருக்கின்றன. ஆனால் நாக சைதன்யா, சமந்தாவுடன் எடுத்துக்கொண்ட படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கவில்லை.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...