அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இனவெறி எதிர்ப்புக்கு ஆதரவுத் தெரிவிக்காத டி காக் அணியிலிருந்து நீக்கம்! 0 பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது உபா வழக்கு- பாஜக தலைவர்! 0 பாஜகவை சேர்ந்த கல்யாண ராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! 0 நாளை மாலை வெளியாகும் அண்ணாத்த படத்தின் ட்ரைலர்! 0 “வழக்கமான அலுவல் பணிகளை சர்ச்சையாக்குவது சரியானது அல்ல” - வெ.இறையன்பு 0 நீர்வீழ்ச்சியில் சிக்கிய தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்கள்! 0 அதிகரிக்கும் கொரோனா தொற்று: சீனாவில் மீண்டும் ஊரடங்கு! 0 தீபாவளிக்கு இனிப்புகளை ஆவினிலேயே வாங்க வேண்டும் - வெ.இறையன்பு 0 அதிக நச்சு வாயுக்களை வெளியிடும் அனல்மின் நிலையங்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! 0 கிரிக்கெட் வீரார் ஷமிக்கு எதிரான அவதூறு பதிவுகள் நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்! 0 3,087 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் அமைப்பு: அமைச்சர் சேகர்பாபு 0 “முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதியை திமுக செயல்படுத்தப்படவில்லை” - கமல்ஹாசன் 0 சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை: கே.பி.முனுசாமி 0 2022 சட்டப்பேரவை தேர்தல்: சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம்! 0 இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு!

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   25 , 2021  16:39:43 IST

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கால அவகாசம் நிறைவடைந்ததாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இதனையடுத்து, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 97,831 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

இந்நிலையில்,ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் தற்போது நிறைவடைந்ததாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...