அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்துக்கு அதிக அளவில் தடுப்பூசிகளை வழங்க வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் 0 தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை 0 தமிழகத்தில் வரும் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு: அரசு அறிவிப்பு 0 அதிகரிக்கும் கொரோனா: முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை 0 கடந்த ஆண்டைபோல ஒன்றுபட்டு கொரோனாவை ஒழிப்போம்: பிரதமர் மோடி 0 ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,501 பேர் உயிரிழப்பு! 0 ரெம்டெசிவிர் மருந்தின் விலை 2800 ரூபாயிலிருந்து 899 ரூபாயாக குறைப்பு 0 வேளச்சேரி வாக்குச்சாவடியில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் 186 வாக்குகள் மட்டுமே பதிவு 0 தடுப்பூசிக்கான வயது வரம்பை 25ஆக குறைக்க வேண்டும் - பிரதமருக்கு சோனியா கடிதம் 0 கால்நடைத் தீவன ஊழல்: 4வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்! 0 கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு விதித்த தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் 0 நண்பன் விவேக் மறைவால், துக்கம் தொண்டையை அடைக்கிறது: நடிகர் வடிவேலு கண்ணீர் 0 மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.500 அபராதம்! 0 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9344 பேருக்கு கொரோனா! 0 நடிகர் விவேக் உடல் தகனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

திமுக ஆட்சியில் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின்

Posted : சனிக்கிழமை,   பிப்ரவரி   27 , 2021  15:07:38 IST

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பொதுமக்களின் சிரமங்களை மனதில் கொண்டு போராட்டத்தைக் கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

14-வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும், போக்குவரத்துக் கழகங்களில் ஏற்படும் இழப்பை அரசே ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 3-வது நாளாக இன்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ”தொமுச உள்ளிட்ட 9 போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. அவர்களை அழைத்துப் பேச்சு நடத்தாமல் அரசு ஆணவத்துடன் நடந்து கொள்வது ஏன்”என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மேலும்,”பொதுமக்களின் சிரமங்களை மனதில் கொண்டு போராட்டத்தைக் கைவிட வேண்டும். திமுக ஆட்சியில் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இது உறுதி” என பதிவிட்டுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...