???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 CAA குறித்து இந்தியாவே சரியான முடிவு எடுக்கும்: டிரம்ப் 0 டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனமே காரணம்: உச்சநீதிமன்றம் 0 டெல்லி வன்முறைகளில் 20 பேர் பலி! 0  "பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்": கமல் 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் 0 டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம் 0 இந்தியர்களை மீட்க சீனா செல்கிறது ராணுவ விமானம் 0 தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் என்.பி.ஆர்: முதலமைச்சர் 0 டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் எடியூரப்பா 0 டெல்லி வன்முறைக்கு 4 பேர் பலி! 0 தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி 0 அம்மா திரையரங்கத் திட்டம் அவசியமில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு 0 சபர்மதி நினைவிடத்தில் காந்தி குறித்து எழுதாத ட்ரம்ப்! 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 32- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 'தலைவி'யாக நடிப்பது சவாலாக உள்ளது: கங்கணா
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 10 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   செப்டம்பர்   16 , 2019  05:22:56 IST


Andhimazhai Image
கொடைக்கானலில் 30 நாட்கள் சகவாசம் எப்படி இருக்கும் என்று பாருங்கள்  நல்ல குளிர். வெயில் மாலை 4 மணிக்கு மேல் வெளியில் வராது. இப்படிப்பட்ட சூழலில் ஒருவன் வாழ்வது என்றால் மகிழ்ச்சியாகத் தான் இருக்கும். ஆனால் நான் சந்தோஷமாக இருப்பதற்கு செல்லவில்லை பணியாற்ற சென்றுகொண்டிருந்தேன்.
 
 
ஒரு திரைப்படம் . அந்த படத்தில்  வேணு ஒளிப்பதிவாளர். நான்கு தேசிய விருதுகள் பெற்றவர்.
 
 
கமலஹாசன் திரைப்பட கதாநாயகனாக நடித்து பணியாற்றிய படம். அதில் நான் உதவி இயக்குனராக பணியாற்றினேன்.
 
 
குகையில் படப்பிடிப்பு.
 
 
இடைப்பட்ட காலத்தில் எல்லாம் நான் ஒவ்வொரு நாளும் ஒரு கதை ஒளிப்பதிவாளருக்கு சொல்வேன் .
 
 
கிராமியக்  கதை. அதை விட்டும் தொட்டும் கேட்பார். அவருக்கு மலையாளம் தாய்மொழி.வட்டார யதார்த்த வாழ்வியல் உணர்வுகளையும் சொல்லிய கதை அப்படி ஒரு கதையை சொன்னேன்.
நீங்களும் முடிந்தால் கேளுங்கள் .
 
 
ஒரு வெள்ளரி தோட்டத்தில் ஒரு பெண் வெள்ளரிக்காயை திருடி கொண்டு செல்கிறாள் . பாவாடை நிறைய வெள்ளரிக் காய்கள் மடியில்  பறித்துப் போடுகிறாள் .
 
 
அந்த  தோட்டத்துக்காரன் ஒருவன் பார்த்துவிட்டான்.
 
 
உடனே ‘யாருடி அது என் தோட்டத்தில் வெள்ளரிக்கா திருடறவ ‘என்று கூவிக்கொண்டே. ஓடி வருகிறான் .அருகில் வந்த பிற்பாடு அந்த பெண் என்ன செய்வது என்று தெரியாமல் பாவாடை நிறைய வெள்ளரிக்காய்…. பயத்துடனும் எதுவும் செய்து விடுவானோ என்று பயந்தபடி அவள் பாவாடையை எடுத்து முகத்தை மறைத்துக் கொள்கிறாள்.
 
 
அவன் அதிர்ச்சியாக… என்று கதை முடிகிறது.
 
 
இந்த கதையை சொல்ல அவர் விழுந்து விழுந்து சிரித்தார்.
 
 
சென்ற ஆண்டு திருவனந்தபுரத்தில் என் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றிருந்தேன். அங்கு 90 களில் சந்தித்த ஒளிப்பதிவாளர் வேணு இருந்தார் . தேடிப் பிடித்து போன் செய்தேன் .அவர் கடைசியில் இரவு பதினொன்று முப்பது மணிக்கு சந்தித்தேன், சில பாண்டிச்சேரி நண்பர்களுடன். அவர் அந்நேரத்தில் எனக்காக காத்திருந்து  என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிப்பிடித்து முதலில் சொன்ன வார்த்தை 'வெள்ளரிக்கா 'என்பதுதான். நான் சொன்ன கதை இன்னும் அவருக்கு நினைவிருக்கிறது
 
 
 
அந்தக் கதையில் ஒரு எதார்த்தம் இருக்கும் .
 
 
அவ்வளவுதான் .
 
 
இந்த எதார்த்த கதைகளை தன்னுடைய வட்டார வழக்கின் மூலமாக எல்லோருக்கும் கொண்டு சேர்த்தவர் கி ரா. என்றழைக்கப்படுகிற
கி ராஜநாராயணன் அவர்கள்
 
 
 1922இல் செப்டம்பர் 16இல் கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் என்ற கிராமத்தில்தான் பிறந்தார். கயிற்றுக்கட்டிலில் தான் வாழ்க்கை .ஒரு விவசாயி . கரிசல் காட்டின் மனித மனங்களை படித்தவர் என்பதால் அவர் தன்னுடைய படைப்புகளை கதைகளின் மூலம் சொல்லி இருக்கிறார். சிறந்த கதை சொல்லி.
 
 
இன்று திருவண்ணாமலையில் கதைசொல்லி என்று மிகப்பெரும் பெயரெடுத்தவர் பவா செல்லதுரை,  அவருக்கு கி ரா முன்னோடியாக இருக்க வாய்ப்புண்டு.
 
 
கி ரா வின் மிகப்பெரிய பலம் என்பது எதார்த்தம் . வெள்ளந்தி வட்டாரவழக்கு தான்.
 
 
1958  இல் தான் சரஸ்வதி பத்திரிகையில் தன் முதல் கதையை எழுத ஆரம்பித்தார். 1982ல் வட்டார வழக்குச் சொல்லகராதி என்ற ஒரு பெரிய பணியை அவர் செய்து முடித்தார் .
 
 
 கோபல்ல கிராமம் நாவல், கரிசல் காட்டு கதைகள் , கிடை , பிஞ்சுகள் குறுநாவல் கவனத்தை பெறுகிறது.
 
 
1990 இல் அவர் படைப்புக்காக சாகித்ய அகாதமி விருது கிடைத்தது .
 
 
2016இல் கனடா தமிழ் தோட்ட விருது கிடைத்தது .பிறகு 2016- 17 க்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கிடைத்தது .
 
 
தமிழக அரசின் விருதும் ,இலக்கிய சிந்தனை விருதும் அவருக்கு பெருமை சேர்த்தது . அதோடு மட்டுமல்ல அவர் பல விருதுகளுக்கு சொந்தக்காரர் .
 
 
ஆனால் அவருக்கு ஞானபீட விருது மட்டும் ஏன் கிடைக்கவில்லை என்று தெரியவில்லை .
 
 
ஒருவேளை அகிலன், ஜெயகாந்தன் இருவரோடு தமிழ் மொழியின் ஆளுமை முடிந்துவிட்டது என்று நினைக்கிறார்களோ  என்னவோ தெரியவில்லை .
 
 
கி ரா அவர்களுக்கு கிடைத்தால் மிகப்பெரிய மகிழ்வாக இருக்கும் .
 
 
இன்று அவருக்கு 97 ஆவது பிறந்தநாள். அவர் நூற்றாண்டைக் கடந்து நல்ல நலத்தோடு வாழ வேண்டும் என்பதுதான் எல்லா தமிழ் வாசகர்களின் கருத்தாக இருக்கிறது.
 
 
எனது வேண்டுதலும் அதுவே.
 
 
அவருடைய கிடை குறுநாவலை வைத்து ஒரு படம் எடுத்தார் அம்ஷன்குமார். பிஎஸ் தரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.  மிக அருமையான படம் .
 
 
2003 என்று நான் கருதுகிறேன். எம்எம் தியேட்டரில் படம் போட்டு காண்பித்தார் .அம்சன் குமார்..கணேஷ்பாபு மிகச்சிறப்பாக அதில் நடித்திருப்பார். எழுத்தாளர் பாரதிமணி . பாலாசிங் ராஜு போன்றவர்களெல்லாம் இதில் நடித்திருப்பார்கள். ராமு சரவணா கூட நடித்ததாக நினைவு. பூர்வஜா என்கிற பெண் கதாநாயகியாக சிறப்பாக  தோன்றினார். கிடை என்றால் ஒரு கிராமத்தில்   ஆடு மேய்த்துக் கொண்டு சென்று இரவில் ஒரு வயக்காட்டில் மடக்கி கிடத்தி காப்பது என்று பொருள். அல்லது  எல்லா ஆடுகளையும் ஒரு இடத்தில் அடைத்து வைத்து ஆடுகளின் எச்சங்கள் பயன்பட்ட பின் காலை எழுந்ததும் மறுபடியும் அந்த ஆடுகளை மேய்த்துக் கொண்டு செல்வதும் ஆன ஒரு வாழ்க்கை முறை எனவும் சொல்லலாம் .
 
 
இந்த வாழ்க்கை முறையை எவ்வளவு அழகாகச் சொல்லியிருப்பார் இயக்குனர் தெரியுமா? . கிராமம் என்றால் சினிமாவில் பாரதிராஜா படம் தான். ஆனால் அதையும் தாண்டி ஒரு உண்மையான கிராமிய வாழ்வை இயக்குநர் அம்ஷன் குமார் படம் பிடித்து காண்பித்திருக்கிறார் . கிடை நாவல் என்கிற அந்த கருப் பொருள் மிகவும் இயக்குநருக்கு உதவியாக இருந்தது . இது ஒரு நல்ல அம்சம் என்றுதான் நான் நினைக்கிறேன் .
 
 
வங்காளம் , கேரளா வில் திரைப்படமாக பல நாவல்கள் வந்திருக்கின்றன .
 
 
ஒருமுறை மம்முட்டி அவர்கள்  எம் டி வாசுதேவன் நாயர் கதை யில் நடித்த போது நான் அருகில் இருக்கிறேன். அது ஒத்தபாலம் என்கிற இடம். இயக்குநர் ஹரிகுமார், படத்தின் பெயர் சுகிர்தம். மக்களாட்சி படத்தில் மம்முட்டி நடிக்கும்போது அவருக்கு தமிழ் வசனங்களைச் சொல்லும் பொறுப்பு எனக்கு இருந்தது. அதற்காக அவரை சந்தித்தபோது இந்த படத்தின் படப்பிடிப்பு.
 
 
 பூமணி எழுதிய வெக்கை  என்கிற ஒரு நாவலை இயக்குநர் வெற்றிமாறன் இப்பொழுது எடுக்கிறார் .நாவல்களை வைத்து படம் எடுப்பது என்பது வாசகர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு புதிய ரசனையை உருவாக்கும் என்பது என்னுடைய ஆழ்ந்த நம்பிக்கை.
 
 
கிரா படைப்பை அறிந்த நாம் ஏன் அவரை சந்திக்காமலேயே இருக்கிறோம் என்று தெரியவில்லை என்று நான் மன உளைச்சலோடு இருந்தேன் . சென்றவாரம்  கதை சொல்லி பவா செல்லதுரை சந்தித்த பிற்பாடு மறுநாள் புதுவைக்கு சென்றேன் .
 
 
எப்படியாவது  கி ரா வை சந்தித்து விட வேண்டும் என்கிற சபதத்தோடு. முக நூலில் நான் இப்படியாக பதிவிட்டேன் . இன்றைய பொழுது இலக்கிய நாளாக மாறும் என்று கருதுகிறேன் என்று பதிவிட்டேன். உடனே நெய்தல் நாடன் ராம்தாஸ் காந்தி அவர்கள் இருவரும்  அலைபேசியில் தொடர்பு கொண்டு அதற்கான ஏற்பாட்டை செய்கிறேன் என்றார்கள். புதுவை  பல்கலை கழகத்தில் தமிழ் துறை இயக்குனர் சம்பத் அவர்களை சந்தித்தால் வழி கிடைக்கும் என்று சொன்னார்கள். சம்பத்தை சந்தித்தோம் . 
 
 
ஆனால் அவர் உடனே ஒரு வேண்டுகோள் வைத்தார். இன்றுதான் தமிழ்த்துறையில் எம்பில் மாணவர்கள் சேர்கிறார்கள். முதல் வகுப்பு தொடங்கி இருக்கிறது. நீங்கள் சிறப்புரையாற்றி தொடங்கி வைக்க வேண்டும் என்று சொன்னார்கள். நாம் அதை  மகிழ்ச்சி யாக செய்து முடித்த பிற்பாடு அருகில் தான் கி ரா இல்லம் இருக்கிறது என்று சொன்னார்.போய் அரை மணி நேரம் தேடித் தேடிப்
பார்க்கிறோம். ஒருவர் L block என்றார் .போய் பார்த்தோம் .இல்லை .மேல்மாடி என்றார் .போய் பார்த்தோம் . இல்லை . M Block  என ஒருவர் சொன்னார். போய் பார்த்தோம் .இல்லை . இப்படி சுற்றி சுற்றி பார்த்த பிற்பாடு Q பிளாக் தரைத்தளத்தில் இருக்கிறார் என்று ஒரு பொதுத்துறை ஊழியர் சொல்ல போனோம்.
 
 
 கி ராஜநாராயணன் என்று அழகாக ஒரு மரப் பலகையில் எழுதி இருந்தது . அப்பாடா என்று மனம் நிம்மதி பெருமூச்சு விட்டது.  அழைப்பு மணியை  அழுத்த யாரு என்ற ஒரு பெண்குரல் .  உள்ளே அனுமதிக்க திறந்தார் கதவை.
 
 
போனோம் . உள் ஹாலில் அங்கே ஒரு குழந்தை தொட்டில் ஆடிக்கொண்டு இருந்தது. அதையும் தாண்டி இடது புறம் சென்றால் நிறைய புத்தகங்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தார் ராஜநாராயணன் வெள்ளை முடி வெள்ளை தலை அழகிய சிரிப்புடன் வாங்க என்று வரவேற்றார். அருகில் அவர் அமர்ந்திருக்கும் செம்மை கலந்த நிறத்துடன் இருக்க ஒரு மிகப்பெரிய நாற்காலியில் அமரச்சொன்னார்.  தயங்கி அமர்ந்தேன்.
 
 
என்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டேன் . மகிழ்ச்சியாக சரி என்ன திரைப்படத்தில் செய்றீங்க என்றார் . வண்ணத்துப்பூச்சி திரைப்படத்தின் கருப்பொருளை சொன்னேன். ரொம்ப மகிழ்ச்சி என்றார். எங்கப்பா இப்ப நல்ல கதைகளை எடுக்கிறாங்க நல்லதை சொன்னா  கேக்கறீங்களா என்ன? உலகம் மாறி இருக்கு விஞ்ஞானம் முன்னேறி இருக்கு.என்று நகைச்சுவையோடு சொன்னார் .
 
 
கம்ப ராமாயணத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் என்றார்.
 
 
என்னுடன் இருந்த ஒருவர் 10,600 என்றார் .
 
 
“16,000 னு சொல்றாங்களே .அப்புறம் 10,000 என்று சொல்றாங்களே கம்பரை விட அதே மாதிரி எழுதின பல பாடல்கள் இடையில் புகுந்திருக்கிறது.கிடைத்திருப்பதாக வந்திருக்கிறது அதை பார்த்து ஒரு குழுவாக தமிழ் இலக்கியவாதிகள் ஒரு இணைந்து அதை நீக்கி இருக்கலாமே..” என்றெல்லாம் அவருடைய பேச்சு மாறிக்கொண்டிருந்தது இலக்கியம் சார்ந்த பல நிகழ்வுகளை நக்கலும் நையாண்டியும் ஆக அவர் பேசினார்
 
 
பேச்சின்  இடையே உபசரிக்க மறக்காமல் அவர் என்ன வேண்டும் என்று கேட்டு தேநீரும் கொடுத்தார் .
 
 
சர்க்கரை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது என்னமோ எலும்பு உருக்கும்   சொல்றாங்க என்று சொல்லி சிரித்துக் கொண்டார் .பிறகு அவர் பேசுகின்ற பேச்சும் மொழியும் என்னை ஆச்சரியமாக இருந்தது.
 
 
தமிழ் இலக்கியத்தில் முதலில் திருக்குறளை எவரும் ஏற்கவில்லை தெரியுமா என ஆரம்பித்தார்.
 
 
தமிழ் இலக்கியத்தில் எதையும் சாதாரணமாக ஏற்றுக் கொள்வ தில்லையே எல்லாவற்றிலும் இலக்கணம் வேண்டும் என்பார்கள். கருப்பொருள் என்ன என்பதை கூட முதலில் பார்க்க மாட்டார்கள் .அப்படித்தான் திருக்குறள் 7 சொற்களில் இருக்கிறது இது என்னப்பா கவிதை? என்று எல்லோரும்…. பெரும் புலவர்கள் எல்லாம் சொன்னார்கள். வேறு வழி இல்லாமல் அதில் சங்கப்பலகையைக்  கேட்டு தெரிந்து கொள்வோம் முடிவுக்கு வந்தார்கள் . 
 
 
அந்தப்பலகை ஏற்றுக்கொண்ட பிறகுதான் எல்லோரும் அதை திருமுறையாக ஒத்துக் கொண்டனர் என்ற ஒரு தகவலைச் சொன்னார். முதலில் தமிழில் இலக்கியத்தில் கருப்பொருள் என்ன அந்தக் கவிஞன் என்ன சொல்ல வருகிறான் படைப்பாளர் என்ன சொல்லுகிறார் புதுமையாக இருக்கிறதா அதை ஏற்றுக் கொள்வோம் என்றெல்லாம் ஒரு பரந்த மனப்பான்மை வேண்டும் அது ஏன் தமிழ் இலக்கியத்தில் பல பேருக்கு இல்லை என்பது எனக்கு புதிராக இருக்கிறது என்று அவர் சொன்னார்.
 
 
 
”ஒருமுறை புதுவைப் பல்கலைக்கழகம் என்ற ஒரு தகவல் பலகை போட வேண்டும் . அப்படி போடுகிற போது ப் என்கிற ஒற்றைச் சொல் எழுத மறந்துவிட்டார்கள். உடனே  தமிழ் ஆர்வலர்கள் எல்லாம் சேர்ந்து கொடி பிடித்து விட்டார்கள். சரி செய்துவிடுகிறோம் என நிர்வாகம் பதில் சொன்னது . ஆனால் ப் உடனே போட்டால் தான் ஆனது என்று சண்டை போட்டார்கள். வேறு வழியில்லாமல் உடனே செய்யக்கூட காரியமா அது? எனவே வேறுவழி இல்லாமல் துணியை வைத்து மறைத்தார்கள் .கீழே இறக்கி வைத்து மறுபடியும் திருப்பி  எழுதிப் போட்டு விட்டு மறுபடியும் மாற்றி விட்டார்கள் .
 
 
சரி எனக்கு ஒன்று புரிகிறது இதனால் தமிழ் வளர்ந்து விட்டதா அழிந்துவிட்டதா .?
 
 
ஒரு தவறு என்று சொன்னால் அது சுட்டிக் காட்டினால் போதும் .அது வேண்டும் என்று யாரும் செய்யப்போவதில்லை . அதை ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்று எனக்கு கடைசி வரை புரியவில்லை . இப்படித்தான் தமிழை வளர்க்கிறார்கள் . நயம்பட நகைச்சுவையாகவும் சொல்லி முடித்தார்
 
 
 
97 வயதில் ஒரு 24 வயது இளைஞனைப் போல கருத்தியல் தர்க்கம்… அதற்கான நேர்மையான உரையாடல் தமிழுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உண்மையான ஆர்வம் இவை எல்லாம் ஒன்று சேர்ந்து  கி ரா வாக தெரிந்தார். ஒரு ஜெயகாந்தனின் மேன்மையான  உருவமாக எனக்கு தென்பட்டார்.
 
இவரைப் போன்ற ஆளுமைகள் தென்பகுதியில் இருந்து பொன்னீலன், தி க சி , வண்ணநிலவன்  ,வண்ணதாசன் போன்ற மிகப்பெரும் எழுத்தாளர்கள் கிடைத்திருப்பது அந்த மண்ணுக்கே உரிய மகத்தான ஆச்சரிய உண்மை.
 
 
தமிழ் எழுத்தாளர் உலகில் இன்னொரு தமிழனை அங்கீகரிப்பதும் உயர வைப்பதும் இல்லை .ஏன் என்று தெரியவில்லை என்று அவர் மனம் நெகிழ்ந்து சொன்னார். கிட்டத்தட்ட அது ஒரு நண்டுகளின் கதையாகத் தான் தெரிகிறது. ஒரு நண்டு இன்னொரு நண்டை வளர வைத்து விடாது உயர ஏற விடாது கால் பிடித்து இழுத்து விடும் என்பதுதான் அந்த கதையின் சாராம்சம்.
 
 
மற்ற மொழிகளில் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் நம் மொழியில் கிடைக்கவேண்டிய மரியாதையும் அங்கீகாரமும் சரியாக கிடைக்காமல் செய்வது இன்னொரு தமிழ் அறிஞராக தான் இருக்கிறார் என்பதை தவிர்க்க முடியவில்லை.
 
 
2006 ல் ஆர் கே நாராயண் கதைகள் தொலைக்காட்சி தொடராக 15 பகுதியாக இந்தி மொழியில் வந்து புகழ்பெற்றது.
 
 
எந்த விதத்திலும் குறையாத அளவு சிறப்பான கதைகள் கொண்ட கி ரா வின் கிராமிய கதைகள் வட்டார மொழியில் இந்தியாவெங்கும் ஒளிபரப்பப்பட் டால் புகழ் பெறும் என்று நான் உறுதியாகச் சொல்லுகிறேன். அது என்னுடைய ஆசையும் கூட.
 
 
(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் வெளியாகும்)
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...