அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 360 டிகிரி எப்படி இருக்கும் தெரியுமா? அண்ணாமலைக்கு பாடம் எடுத்த பிடிஆர்! 0 பிரதமரிடம் கேட்காமல் யாரிடம் கேட்பது? சேகர்பாபு விளக்கம் 0 சபாநாயகருக்கு கார்த்திக் சிதம்பரம் கடிதம்: நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறியதாக குற்றச்சாட்டு 0 சர்வதேச புக்கர் விருதை பெற்ற முதல் இந்திய எழுத்தாளர்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 13: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்! 0 மாநிலங்களைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் 0 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள கன்னட படத்தின் டீசர் இன்று மாலை வெளியீடு! 0 மசூதிகள் கட்டுவதற்கு 36,000 இந்துக் கோயில்கள் இடிப்பு – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு! 0 சேத்துமான்: திரைவிமர்சனம்! 0 விஷமக்காரன்: திரைவிமர்சனம்! 0 குட்கா, புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு! 0 பாலியல் தொழிலாளர்களை மாண்புடன் நடத்த வேண்டும்: காவல்துறை, ஊடகங்களுக்கு நீதிபதிகள் வழிகாட்டுதல் 0 பிரதமரை வைத்துக்கொண்டு முதல்வர் நடந்துகொண்டது தமிழகத்தின் கரும்புள்ளி: அண்ணாமலை காட்டம் 0 பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வைத்த 5 முக்கிய கோரிக்கைகள்! 0 தமிழ் மொழி பழமையானது, தமிழ் கலாசாரம் சர்வதேச அளவில் புகழ்பெற்றது: பிரதமர் மோடி பேச்சு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு!

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   24 , 2022  10:28:55 IST

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்பட மொத்தம் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளும் இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. அதில் உள்ள இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த 19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 85 சதவீத இடங்கள், தனியார் கல்லூரிகளில் உள்ள மாநில அரசு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை மருத்துவக் கல்வி இயக்குநரகம் (டிஎம்இ) கலந்தாய்வு நடத்தி நிரப்பி வருகிறது.

இந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2021-22-ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி தொடங்கி கடந்த 7-ஆம் தேதி நிறைவடைந்தது. அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனித்தனியாக நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர்.

அதன்படி, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,511 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,777 பேரும் என மொத்தம் 40,288 போ் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதையடுத்து, தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை மாலை சென்னையில் வெளியிடவுள்ளார். உடனடியாக  https://www.tnhealth.tn.gov.in/, https://tnmedicalselection.net/ ஆகிய சுகாதாரத்துறை இணையதளங்களில் அவை பதிவேற்றம் செய்யப்படவுள்ளன.

வரும் 27-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர் பிரிவுகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நேரடியாக நடைபெறுகிறது. 28, 29-ஆம் தேதிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டு இடங்களுக்கும் நேரடி கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

அதன் பின்னர், 30-ஆம் தேதி பொதுக் கலந்தாய்வு தொடங்குகிறது.


 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...