தேர்தல் பிரச்சாரம்: அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மார்க்சிஸ்ட் வேட்பாளர்!
Posted : புதன்கிழமை, மார்ச் 17 , 2021 11:42:55 IST
திமுக கூட்டணி சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பொன்னத்தாய் போட்டியிடுகிறார். இவர் ஆட்டோ டிரைவரின் மனைவி ஆவார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல லட்சம் rரூபாய் மதிப்புள்ள வாகனத்தில் பிரச்சாரம் செய்யும் நிலையில், பொன்னுத்தாய் தனது கணவருடன் தங்களது சொந்த ஆட்டோவில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொன்னுத்தாய் தனது கணவருடன் ஆட்டோவில் சென்று வாக்கு சேகரிப்பது போன்ற உள்ள புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.