அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்! 0 360 டிகிரி எப்படி இருக்கும் தெரியுமா? அண்ணாமலைக்கு பாடம் எடுத்த பிடிஆர்! 0 பிரதமரிடம் கேட்காமல் யாரிடம் கேட்பது? சேகர்பாபு விளக்கம் 0 சபாநாயகருக்கு கார்த்திக் சிதம்பரம் கடிதம்: நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறியதாக குற்றச்சாட்டு 0 சர்வதேச புக்கர் விருதை பெற்ற முதல் இந்திய எழுத்தாளர்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 13: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்! 0 மாநிலங்களைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் 0 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள கன்னட படத்தின் டீசர் இன்று மாலை வெளியீடு! 0 மசூதிகள் கட்டுவதற்கு 36,000 இந்துக் கோயில்கள் இடிப்பு – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு! 0 சேத்துமான்: திரைவிமர்சனம்! 0 விஷமக்காரன்: திரைவிமர்சனம்! 0 குட்கா, புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இலங்கை அரசின் பிடியிலிருக்கும் 105 படகுகளை மீட்க கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்!

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   24 , 2022  11:07:08 IST

இலங்கை அரசின் பிடியிலிருக்கும் 105 மீனவப் படகுகளும் மீட்கப்பட வேண்டும் என கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், அவர்களின் படகுகள் சேதப்படுத்தப்படும் பல ஆண்டுகாலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல் தமிழக மீனவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து வருகிறது.

அந்தவகையில்,  கடந்த 7 ஆண்டுகளாக இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் பராமரிப்பின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. தமிழக மீனவர்களின் இந்த 105 படகுகளை இலங்கை அரசு அடுத்த மாதம் ஏலம் விடப் போவதாக அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்,

இலங்கை அரசின்
பிடியிலிருக்கும்
105 மீனவப் படகுகளும்
மீட்கப்பட வேண்டும்

அலைவிரிக்கும் சமுத்திரத்தில்
வலைவிரிக்கும் மீனவர்க்குப்
படகுதான் கடல் கடவுள்.
அவை உரியவரிடம்
ஒப்படைக்கப்பட வேண்டும்

இலங்கைக்கு
இந்தியா கொடுத்த கடன்
திரும்புமோ இல்லையோ
முதலில்
படகுகள் திரும்ப வேண்டும்

இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...