அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழ்த்தாய் வாழ்த்து: கலைஞர் திருத்தியது செல்லும் - நீதிமன்றம்! 0 பஞ்சாப் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக! 0 இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: தென்னாப்பிரிக்காவுக்கு 288 ரன்கள் வெற்றி இலக்கு! 0 ஹைதராபாத்: ராமானுஜரின் பிரமாண்ட சிலையை திறந்து வைக்கும் பிரதமர்! 0 தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு! 0 அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் - அமைச்சர் பொன்முடி 0 வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று! 0 தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான -2வது ஒருநாள் ஆட்டம்: டாஸ் வென்ற இந்திய அணி! 0 வேலையிலிருந்து தப்பிக்க இப்படி எல்லம் செய்ய முடியுமா? 0 டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜிக்கு சிலை - பிரதமர் மோடி 0 சாய்னா நேவால் குறித்து அவதூறு பேச்சு; நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் 0 நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று! 0 தமிழ்நாட்டில் 7 இடங்களில் அடுத்த மாதம் அகழாய்வு பணி தொடக்கம்: மு.க.ஸ்டாலின் 0 3வது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கைகள் குறைவு: மத்திய அரசு 0 யூடியூபை ஏன் தடை செய்யக் கூடாது? நீதிமன்றம் கேள்வி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பன்றியின் இதயம் மனிதனுக்கு! மருத்துவ சாதனை

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   11 , 2022  17:23:38 IST


Andhimazhai Image

ஒரு ஆச்சர்யமான செய்தி. இனி யாரையாவது பன்றியே என்று செல்லமாகத் திட்டுவதற்குக் கூட சற்று யோசிக்கவேண்டிய நிலை வரலாம். ஆம். அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்தி சாதனை படைத்துள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இதை ஒரு மைல் கல்லாகவே பார்க்கின்றனர் மருத்துவ உலகினர்.
 

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவைப்படும் உறுப்புகள் கிடைக்காமல் தவிக்கும் நிலை இனி மாறலாம்.


அமெரிக்காவின் மேரிலாந்தை சேர்ந்த டேவிட் பென்னட் (வயது - 57) என்பர் இதய நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். வேறு இதயத்தைப் பொருத்தாவிட்டால் அவரின் மரணம் உறுதி என்ற நிலையில், பன்றியின் இதயத்தை அவருக்குப் பொருத்த மேரிலாந்து மருத்துவ பல்கலைக்கழக மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதற்காக அமெரிக்க சுகாதாரத்துறையின் ஒப்புதலையும் அவர்கள் பெற்றனர்.


இதையடுத்து மனிதர்களின் உடலுக்கு பொருந்தும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் டேவிட் பென்னட்டுக்கு கடந்த வெள்ளிக்கிழமை பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையானது எட்டு மணி நேரம் நடைபெற்றிருக்கிறது. சிகிச்சை முடிந்து மூன்று நாட்களுக்குப் பின் பென்னட் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், டேவிட் பென்னட், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.


மனிதர்களின் உடல் உறுப்புகளும் பன்றிகளின் உடல் உறுப்புகளும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக உள்ளன. இதனால் பன்றியின் இதயம் ஏற்கனவே மனிதர்களுக்குப் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த இதயங்கள் மனித உடலுக்கு முழுமையும் பொருந்தாததால் அறுவை சிகிச்சைகளில் வெற்றி கிடைக்கவில்லை. எனவே மனிதர்களின் உடலுக்கு பொருந்தும் வகையில் பன்றியின் இதயத்தில் மரபணு ரீதியிலான மாற்றங்கள் செய்யப்பட்டு உலகிலேயே முதன்முறையாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தற்போது செய்யப்பட்டுள்ளது.


அதாவது பத்து மரபணுக்கள் இந்த பன்றியில் மாற்றப்பட்டன. நான்கு மனிதனுக்கு ஒவ்வாத மரபணுக்கள் நீக்கப்பட்டு, மனித மரபணுக்கள் ஆறு இந்த பன்றியில் சேர்க்கப்பட்டு வளர்க்கப்பட்டது.


இதில் நம்பிக்கை தரும் முடிவு கிடைத்துள்ளதால், எதிர்காலத்தில் பன்றியின் மற்ற உடலுறுப்புகளையும் மரபணு மாற்றம் செய்து மனிதர்களின் உடலில் பொருத்தும் சூழல் ஏற்படலாம். ஏற்கெனவே பன்றியின் இதய வால்வுகள் மனிதனுக்குப் பொருத்தப்பட்டு வருகின்றன.

 

உலகெங்கும் உறுப்பு தானத்திற்காக காத்துள்ள கோடிக்கணக்கான நோயாளிகளுக்கு இது மிகப்பெரும் தீர்வாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...